இன்றைய நவீன உலகில் செலவில்லாமல் எப்படி விவசாயம் செய்யலாம் என்று உலகம் முழுவதும் போராடி வருகின்றனர். இந்நிலையில் நாம் ஏன் இயற்கை பூச்சி விரட்டிக்கு செல்வு செய்ய வேண்டும்.
கிராமங்களில் நாம் காணும் இடங்களில் எல்லாம் எளிதாக கிடைக்கும் இலை, தழைகளை கொண்டு பூச்சி மருந்து தயாரிக்கும் முறை குறித்து காணலாம்.
நம்மாழ்வார் வழிகாட்டுதல்படி ஆடு, மாடு சாப்பிடாத ஏதாவது ஒரு இலைகள், ஒடித்தால் பால் வரும் எருக்கலை போன்ற இலைகள், வேப்ப இலை, போல கசப்பு தன்மை கொண்ட இலைகள் இருந்தால் போதும் இயற்கை பூச்சி விரட்டி தயாரித்து விடலாம்.
இந்த முறையில் எருக்கலை, தும்பை, துளசி, குப்பைமேனி போன்ற இலைகளை 10 கிலோ அளவிற்கு எடுத்து, நன்றாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
இத்துடன் மஞ்சள் தூள் 250 கிராம், மாட்டு கோமியம் 10 லிட்டர், சாணம் 5 கிலோ சேர்த்து கலக்கி பெரிய டிரம்மில் போட்டு ஒரு வாரம் ஊறவிட வேண்டும்.
பின், சாறை சுத்தமாக வடிகட்டி தனியே எடுத்து வைக்க வேண்டும். இதனை சுத்தமான நீரில் கலந்து, பயிர்களில் தெளித்தால் பூச்சிகள் நெருங்கவே, நெருங்காது.
வேப்பம் விதைகள், புண்ணாக்கு அதிகம் பயன்படுத்தியும் தயாரிக்கலாம், இதுவும் நல்ல பலன் தரும். இதை சொட்டு நீரிலும் கலந்து தெளிக்கலாம்.
– எம்.ஞானசேகர்
விவசாய ஆர்வலர், சென்னை.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
வேப்பம் விதை புண்ணாக்கு எங்கு பெற்றுக்கொள்ளலாம்
Good
மஞ்சளில் வேர் அழுகலை கட்டுப்படுத்த என்ன மருந்து தெளிக்க வேண்டும்
GOOD