- எங்கெல்லாம் ஆட்டுக்கிடை அமர்த்துகிறோமோ, அந்த வயலில் எலி வாழாது.
- நொச்சி மற்றும் எருக்கலை செடியை வயல் சுற்றி வேலிப்பயிராக நட்டால், எலித் தொல்லை வராது.
- தங்கரளி கிளைகளை வயல்சுற்றி போட்டால் எலி வராது.
- நெல் வயலில் எலியைக் கட்டுப்படுத்த ‘சணப்பு’ பூவை சிறிய துண்டுகளாக்கி, அதைப் பரவலாக அங்கு அங்கே வயலில் இட்டால், அதிலிருந்து கிளம்பு வாடையினால் எலிகள் ஓடி விடும்.
- பனை ஓலைகளை அருகில் ஆந்தை உட்கார குச்சியில் கட்டி வைத்தால் அதிலிருந்து கிளம்பும் ஓசையினால் ‘எலிகள்’ ஓடிவிடும்.
- எலி வலைக்கு அருகில் ஆந்தை உட்கார குச்சி வைத்தால் அது எலித் தொல்லையை குறைக்க உதவும்.
- எலி எண்ணிக்கையை குறைக்க ஒவ்வொரு பயிர் அறுவடைக்குப்பின்பு, எலி வலைத்தோண்டி எலிகளை அழிக்கவேண்டும்.
- எலிகளைக் கட்டுப்படுத்த, மூங்கில் கழிகளின் மீது வயர் சுற்றி பிடிக்க ஒரு பொறி செய்து பயன்படுத்தலாம்.
- எலியை அழிக்க, ஒரு பெரிய வட்ட வடிவமான மண் பானையை வயலில் தரைமட்டத்திற்கு புதைக்கவேண்டும். அதில் பாதியளவு களிமண் சாந்தை நிரப்பிவிடவேண்டும். ஒரு தேங்காய் தொட்டியில் எலி உணவு வைத்து அதைப் பானையின் உள்ளே வைத்தால், எலியை கவரும், கவரப்பட்ட எலியானது மண் சாந்தில் விழுந்து மேல் எழ முடியாமல் இறந்துவிடும்.
- ஊறவைத்த அரிசியை எலி கவரும் பொறியாக வைத்தால், நிறைய எலிகளைக் கவரும்.
- பசும் சாணத்தை வயலிலும், வரப்பிலும் வைத்தால், எலித்தொல்லைக் குறையும்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
பெருச்சாளி என்பது எலிக்குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி ஆகும். இவை வங்காளதேசம், சீனா, இந்தியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், இலங்கை, தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. இவை 27-29 செ.மீ வரை வளரக்கூடியவை.