கம்போஸ்ட் உரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை

“கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பருவமழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகள் உரமான கம்போஸ்ட் உரங்களை பயன்படுத்தி அதிக விளைச்சலை பெறலாம்’ என்று வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) பச்சையப்பன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

 • கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரண்டு லட்சம் ஹெக்டேரில் நெல், பயறு வகைகள், சிறுதானியங்கள், எண்ணைய் வித்து பயிர்கள், மலர் பயிர்கள், காய்கறிபயிர்கள், பழப்பயிர்கள் ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது.
 • மாவட்டதில் இயங்கி வரும், 125 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம், 30 கோடி ரூபாய் அளவுக்கு விவசாய கடன்கள் வழங்கி தானிய உற்பத்தி பெருக்கப்பட்டு வருகிறது.
 • கடன் வழங்கும் போது இடுபொருட்களான விதைகள், யூரியா, டிஏபி, சூர்ப்பர் பாஸ்பேட், மற்றும் கலப்பு உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது, மாவட்டத்தில் பருவமழை பெய்ய தொடங்கியுள்ளதால், விவசாயிகள் இயற்க்கை உரங்களான கம்போஸ்ட் உரங்களை பயன்படுத்த வேண்டும்.
 • கம்போஸ்ட் என்பது மக்கிய தாவர அல்லது விலங்குகளிடம் இருந்த பெறப்படும் கருமை நிற உரமாகும்.
 • இந்த உரத்தை மண்ணில் இடும்போது மண்ணின் தன்மை சீர்படுவதோடு மிக முக்கிய சத்துகள் பயிர்களுக்கு எடுத்து கொடுக்கப்படுகிறது.
 • இந்த உரத்தை நடவுக்கு முன்னாலும், நடவுக்கு பின்பும் வயல்களில் இடலாம்.அனைத்து வகை பயிர்களுக்கும், மலைப்பயிற்களுக்கும் பழவகை பயிர்களுக்கும் , காய்கறிகளுக்கும் மற்றும் மரவகைகளுக்கும் கம்போஸ்ட் உரங்களை அவசியம் இட வேண்டும்.
 • கடந்த, 30 ஆண்டுகளாக ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், மண்ணில் அங்கக தண்மை குறைந்து மிகவும் உயிரற்ற மண் ஆகி வருவதால், அங்கக தண்மையை அதிகப்படுத்த கம்போஸ்ட் உரங்களை இடவேண்டும்.
 • கம்போஸ்ட் உரங்களை இடும்போது, மண்ணின் காற்றோட்ட வசதி கூடுகிறது.
 • மண்ணின் அங்கக தன்மை உயர்வதால் மண்ணின் ஈரப்பதம், நீர்நிலை நிறுத்தும் தன்மை, மண்வளம் ஆகியவை அதிகரிக்கிறது.
 • உயிர் உயரங்களாகிய அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது.
 • மண்ணின் வெப்ப நிலை, அமில தன்மை ஆகியவை சீராக வைக்க உதவுகிறது.
 • மண்ணின் ரசாய உரங்களை எளிதில் பயிரிக்கு எடுத்து கொடுக்கிறது.

எனவே, விவசாயிகள் அனைத்து வகை பயிர்களுக்கும் இயற்கை உரமான கம்போஸ்ட் உரத்தை இட்டு விளைச்சல் பெருக்கி அதிக லாபம் பெறலாம், என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “கம்போஸ்ட் உரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *