கழிவு பஞ்சு ஒரு இயற்கை உரம்!

பொங்கலூர் பகுதியில் கழிவுப் பஞ்சை உரமாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

இளைஞர்கள் விவசாய வேலையை விரும்பாதது; மாடு மேய்ப்பதற்கு ஆட்கள் கிடைக் காதது போன்ற காரணங்களால் இயற்கை உரங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

  • மாட்டுச்சாணத்துக்கு மாற்றாக மில்களில் கழிவுப் பஞ்சுகளை வாங்கி வந்து அதிகம் பயன்படுத்துகின்றனர்.இது, மண்ணின் நீர்ப்பிடிப்பு தன்மையை அதிகரித்து, மண் இறுகாமல் வைத் திருக்கிறது.
  • இதன் மூலம் கூடுதல் மகசூல் கிடைக்கிறது.
  • ரசாயன உரங்களை போடுவதால், மண்புழுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. இயற்கை உரமான பஞ்சு கழிவுகளால் மண் புழுவுக்கு தீங்கு ஏற்படுவதில்லை.
  • மண் புழு பெருக்கத்தால் பஞ்சு கழிவுகள் உரங்களாக மாற்றப்படுகின்றன.
  • இதை பயன்படுத்தி விளைவிக்கப் படும் வெங்காயம், மஞ்சள், பீட்ரூட், முள்ளங்கி போன்றவை உருவத்தில் பெரியதாகவும், நல்ல நிறத்துடனும் காணப்படுகிறது. இதற்கு விலையும் கூடுதலாக கிடைக்கிறது.
  • ஆரம்பத்தில் செயற்கை உரங்களை விட கொஞ் சம் அதிகம் முதலீடு தேவைப்படுகிறது.
  • ஒரு தடவை இவற்றை நிலத்தில் போட்டால் ஓராண்டுக்கு உரச்செலவு இல்லை. மண் வளமும் பாதுகாக்கப்படுகிறது

இவ்வாறு பொங்கலூர் வட்ட விவசாயிகள் கூறுகின்றனர்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *