குறுவை நெற்பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை கரைசல்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் தனியார் இயற்கை வேளாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஜெயராமன் தெரிவித்துள்ளதாவது:

  • குறுவை நெற்பயிரில் பல பகுதிகளில் பூச்சி தாக்கம் உள்ளது. குறிப்பாக நாற்று அழுகல் நோய் அஸ்வினி, இலைப்பேன், இலைசுருட்டு மற்றும் பல நோய் தாக்குதலும் பரவலாக உள்ளது.
  • இதிலிருந்து பயிரை காப்பாற்ற வேப்பங்கொட்டை கரைசல் மிகுந்த பயன் தரும்.

வேப்பங்கொட்டை கரைசல் தயாரிக்கும் முறை:

  • ஒரு கிலோ வேப்பங்கொட்டையை நன்கு இடித்து தூள் செய்து அதை 10 கோமியத்தில் 24 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • பின்னர் இந்த கலவையை கிளிஞ்சல் சுண்ணாம்பு அரை கிலோ கலந்து 48 மணி நேரம் கழித்து வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு 8 டேங் கை ஸ்பிரேயர் கொண்டு காலை 10 மணிக்கு முன்பாகவும், மாலையில் 3 மணிக்கு பின்பும் தெளிக்க வேண்டும்.
  • இவ்வாறு தெளிப்பதால் பயிர் நன்கு தெளிந்து மகசூல் பாதிப்பு இல்லாமல் கிடைக்கும்.
  • பூச்சி தாக்குதல் இல்லாத பயிர்களிலும் இதை பயன்படுத்தலாம்.
  • இந்த வகை வேப்பங்கொட்டை கரைசல் 50 சதவீதம் பூச்சி விரட்டியாகவும், 50 சதவீதம் பயிர் வளர்ச்சியாகவும் இருக்கிறது.
  • இந்த கரைசல் தயாரிக்கும்போது பிளாஸ்டிக் ட்ரம் மற்றும் மண்பானை, மண்தொட்டி, சிமென்ட் தொட்டி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  உலோக பாத்திரத்தில் பயன்படுத்தக்கூடாது.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *