பசுமை தமிழகத்தில் ஏற்கனவே, சிறுநீர இட்டு வளர்க்க பட்ட வெள்ளரி காயை பற்றி படித்துள்ளோம். முசிறியில் சிறுநீரில் இருந்து உரம் தயாரிக்கும் முயற்சி பற்றியும் படித்தோம்.
இப்போது, அதை பற்றி மேலும் சில செய்திகள்.
சிறுநீரில் உள்ள போஸ்போரஸ் (Phosphorus) எளிதாக எடுத்து Struvite
என்ற உரத்தை தயாரிக்கும் முறை பற்றி சுவிட்சர்லாந்தில் ஆராய்ச்சி செய்து இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளார்கள். அதன் தமிழாக்கம் இதோ:
Struvite என்றால் என்ன?
சிறுநீரில் உள்ள போஸ்போரஸ் உடன் மக்னீ சியம் (Magnesium) சேர்த்து செய்ய படும் உரம் ஆகும்.
இதன் ரசாயன போர்முலா MgNH4PO4•6H2O.
இது வெள்ளை நிற பொடி ஆகும். வாசனை அற்றது. மண்ணில் சத்தை மெதுவாக நிலத்தில் வெளியிடும் தன்மை கொண்டது.
Struvite தயாரிப்பது எப்படி?
உப்பங்கழிகளில் உப்பு எடுத்த பின் உள்ள நீரானது (Bittern), மக்னீசியம் அதிகம் கொண்டதாகும். இந்த நீர் இல்லா விட்டால், மக்னீசியம் கலோரிட் (MgCl2) அல்லது மக்னீசியம் கார்போன்ட்டு (MgCo3) அல்லது மக்னீசியம் ஸல்பேட் (MgSo4) எடுத்து கொள்ளலாம்.
மேலும் கீழும் இரண்டு கலங்களை அமைத்து கொள்ளவும். பிளாஸ்டிக் அல்லது கிளாஸ் ஆனதால் செய்யப்பட்ட கலங்களை பயன் படுத்தலாம். இரண்டு கலதிற்கும் நடுவில் ஒரு வால்வ் இருக்கும் படி செய்து கொள்ளவும். வால்வ் கீழே ஒரு வடிகட்டும் துணியை கட்டவும்.
மேல் உள்ள களத்தில் சிறுநீரையும் மக்னீ சியம் இரண்டும் சேர்த்து பத்து நிமிடம் கலக்கவும்.
நன்றாக கலக்கிய பின், வால்வை திறந்து கீழே உள்ள கலத்தில் வர செய்யவும்.
இந்த திரவத்தை ஒரு மெல்லிய துணி மூலம் வடி கட்டினால், பொடி போல் தங்கி விடும்.
இந்த பொடியை வெய்யிலில் இரண்டு நாள் காய விட்டு உரமாக பயன் படுத்தலாம்.
Struvite பயன்கள்:
- பயிர்களால் எளிதாக உருஞ்ச படுகிறது
- நீரில் மெதுவாக கரைவதால், சத்துக்கள் மெதுவாக பயிர்களுக்கு கிடைக்கிறது
- சிறிய மூலதனத்தில் எளிதாக தயாரிக்க கூடியது
பெரிய அளவில் தயாரிக்க நிறைய சிறுநீர் தேவை படும். இதனால், நகராட்சி மன்றங்கள், பொது சிறுநீர் கழிக்கும் இடங்களில் இந்த முறைய செயல் படுத்தலாம். முசிறியில் இதை தான் செய்ய போகிறார்கள்.
நன்றி: Sustainable sanitation and water management
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
3 thoughts on “சிறுநீரில் இருந்து Struvite உரம் தயாரிப்பது எப்படி?”