சிறுநீர் இருந்து உரம் பற்றி பெங்களூர் விவசாய பல்கலை கழகம் ஆராய்ச்சி

மனித சிறுநீரில் இருந்து உரம் தயாரிப்பது பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம்.
திருச்சி அருகே இது நடைமுறை படுத்துவது பற்றியும் படித்து உள்ளோம்

இப்போது பெங்களூரில் உள்ள விவசாய பல்கலை கழகம் (University of Agricultural Sciences Hebbal) இதை விக்யான பூர்வமாக
நிருபித்து உள்ளது.
விரல் தினை (finger millets) , அரிசி, தக்காளி, வேண்டி , கத்தரிக்காய், காராமணி, செடி பீன், பிரஞ்சு பீன்ஸ் போன்ற பயிர்கள்
சிறுநீர் உரம் மூலம் பயன் பெறுவதாக தெரிகிறது.
சிறுநீரில் கணிசமான அளவு நைட்ரோஜென் , பாஸ்போரஸ்  மற்றும் பொட்டாஷ் (NPK) இருப்பதாக தெரிகறது
ஆனால், சிறுநீரை நேரடியாக செடிகளின் மீது தெளிக்க கூடாது. நீருடன் சேர்த்து தெளிக்க வேண்டும்

இதை பற்றிய பேட்டி கொடுத்த பேராசிரியர் ஸ்ரீனிவாசமுர்த்தி அவர்கள் “இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் சதவீதம்
சிறுநீரை சேர்த்தாலே போதும் நாட்டில் உர தேவை சமாளிக்கலாம் ” என்றார்
இதை பற்றிய செய்தி பற்றி இங்கே படிக்கலாம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *