சிவகங்கை இயற்கை பண்ணை முறை விவசாயம்

சிவகங்கை மாவட்டம் படமாத்துார் அருகே சித்தாலங்குடியை சேர்ந்தவர் குமரேசன் 37. இவர் துபாயில் பணி புரிகிறார். அங்கிருந்தபடி தனது கிராமத்தில் இயற்கை பண்ணை முறையில் விவசாயம் செய்கிறார்.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கருத்துக்களை மையமாக கொண்டு சித்தாலங்குடியில் ‘தமிழ் நிலா’ என்ற பெயரில் 28 ஏக்கரில் ஒருங்கிணைந்த இயற்கை பண்ணை முறை விவசாயம் செய்து வருகிறார்.

இதில் பூச்சி மருந்து, ரசாயன உரங்கள் ஏதுமின்றி இயற்கை உரங்களை வைத்து சொட்டு நீர் பாசனம் முறையில் விவசாயம் செய்கிறார். பஞ்சகவ்யம் தயாரித்து அதனை மட்டுமே விவசாயத்திற்கு உரமாக பயன்படுத்துகிறார்.

இப்பண்ணையில் கேரள மாநிலம் தலைசேரி ஆடுகள், நாட்டு ஆடுகள், நாட்டுக் கோழி பண்ணைகளை அமைத்துள்ளார். கொய்யா, தென்னை போன்றவைகளை வரப்பு பகுதியில் பயிர் செய்து வருகிறார். ஆடுகளுக்கு இயற்கையான பசுந் தீவனம், உலர் தீவனம், அடர் தீவனம் தேவையான அளவு வழங்கி ஒரு ஆடு 40 முதல் 50 கிலோ எடை வரை வளர்த்து விற்பனை செய்கிறார்.

கோழிகள், வாத்து, வான்கோழி போன்றவைகள் இயற்கையான முறையில் மேய்ச்சலுக்கு விட்டு அதன் முட்டைகளை சேகரிக்கும் பணியும் நடக்கிறது. இயந்திரம் மூலம் தீவனம் தயாரிக்கிறார். பஞ்சகவ்யம் தயாரிக்க தனி பிளான்ட் அமைத்துள்ளார்.

குமரேசன் கூறியதாவது:

  • தண்ணீர் வசதிக்காக 4 இடங்களில் போர்வெல் அமைத்து சொட்டு நீர் பாசன வசதி செய்துள்ளேன்.
  • சூரிய ஒளி மின் சக்தியில் விளக்குகள், ஜெனரேட்டர், மின் இணைப்பு பெற்றுள்ளேன்.
  • ஆடுகள், கோழிகள் பராமரிப்பு செய்ய கால்நடை மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
  • பண்ணையில் கண்காணிப்பு கேமரா பொருத்தி பண்ணையில் நடக்கும் அனைத்து காட்சிகளும் அலைபேசியில் இணைப்பில் உள்ளது.
  • எனது குடும்பத்தினர் மூலம் தொழிலாளர்களை நியமித்து பண்ணையை நடத்தி வருகிறேன், என்றார்.

தொடர்புக்கு 9080855958 .

ப.அன்பழகன்
சிவகங்கை.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *