உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டுமெனில், ‘ஜீரோ பட்ஜெட்’ இயற்கை வேளாண் முறையை பின்பற்ற வேண்டும்,” என, இயற்கை வேளாண் விஞ்ஞானி சுபாஷ் பாலேகர் பேசினார்.
‘ஜீரோ பட்ஜெட்’ இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கு, திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நேற்று நடந்தது. ‘நபார்டு’ வங்கி தலைமை பொது மேலாளர் வெங்கடேஸ்வர ராவ் தலைமை வகித்தார்.இயற்கை வேளாண் விஞ்ஞானி சுபாஷ் பாலேகர் பேசியதாவது:
- மனித வாழ்க்கை, இயற்கையை சார்ந்து வாழ்வதாகும். இயற்கையை அதிகம் நேசிப்பவர்கள் விவசாயிகள். அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை, அரசோ அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களோ, கண்டு கொள்வதில்லை. விவசாயம் யாருக்கும் எதிரானது அல்ல; பிரச்னைகளை நாமே சரி செய்ய துவங்குவதே, இயற்கை விவசாயம். நம் நாடு உணவு உற்பத்தியில், தன்னிறைவு அடைந்து விட்டதாக பொய் பிரசாரம் செய்யப்படுகிறது.
- இன்று வரை அரிசி, கோதுமை, பழங்கள், எண்ணெய் வித்துகள், சிறு தானியங்களை, இறக்குமதி செய்கிறோம். அதிக மகசூல், அதிக லாபம் என, மண்ணுக்கு கேடு விளைவிக்கும் ரசாயன கலப்பு உரங்களை இட்டு, மண்ணையும், உணவையும் விஷமாக மாற்றி வருகிறோம்.
- உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற, வேளாண் பல்கலைகள், இதுவரை எந்த ஆலோசனையும் வழங்கவில்லை. வேளாண் அறிஞர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் வரும். ரசாயன கலப்பு உரங்களால், என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என, அப்போது தெரியும்.
- மண் மாசு, உணவு விஷம், புவி வெப்பம், விவசாயிகள் தற்கொலை என, பல பிரச்னைகள் நம்மை சுற்றியுள்ளன. இதற்கு ஒரே தீர்வு, செலவில்லா இயற்கை விவசாயம். ஜீரோ பட்ஜெட்’ முறையில் சாம்பல், மணிச்சத்து, ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் போன்ற இயற்கை உரங்களை தயாரித்து, பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்; அதிக லாபம் பெற முடியும்.” இவ்வாறு, சுபாஷ் பாலேக்கர் பேசினார்
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்