தழைச்சத்து பயிராக சித்தகத்தி

செயற்கை உரங்களுக்கு மாற்றாக, இயற்கை உரங்களை பயிரிட விவசாயிகள் நாட்டம் காட்டுகின்றனர். இதற்காக, சதைப்பற்றுள்ள பயறு வகைகளை பயிரிட்டு வருகின்றனர்.

  • ரசாயன உரங்களின் விலை அதிகம் என்பது மட்டும் அல்லாது மண் வளத்தையும் பாதிக்கிறது. இதற்கு மாற்றாக உருவாக்கப்பட்டது தான் பசுந்தாள் உரம்.
  • மண்ணில் அங்ககப் பொருட்களை அதிகரிப்பதற்காக பயிரிடப்படும் பயிர்கள், பசுந்தாள் உர பயிர்கள் ஆகும்.
  • தக்கை பூண்டு, கொளிஞ்சி, சணப்பு, கிளைரிசியா, அவரை, புங்கம், எருக்கு, சூரியகாந்தி உள்ளிட்டவை பசுந்தாள் உர பயிர்கள் ஆகும்.
  • பயிர்களில் நைட்ரஜனை நிலைநிறுத்துவது அல்லது மண்ணில் அங்கக பொருட்களை நிலைநிறுத்துவது, பசுந்தாள் உரமிடுதலின் குறிக்கோள் ஆகும். பயறு வகை பயிர்கள் அதிக சதைப்பற்று உடையவை.
  • மிக குறுகிய காலத்தில் வளரும் தன்மை வாய்ந்தவை.
  • இவை நன்கு வளர்ந்ததும், விதைகள் முற்றுவதற்கு முன்பாக, நிலத்தில் உழுதுவிட வேண்டும்.
  • இதன் மூலம், பயிர்களுக்கு தேவையான தழைச்சத்து நிலத்தில் சேர்க்கப்படுகிறது.
  • தழைச்சத்து பயிர்கள், முதன்மை பயிர்களால் உறிஞ்சப்பட முடியாத, நிலத்தில் ஆழமான பகுதியில் உள்ள சத்துக்களை உறிஞ்சி தாவரங்களில் சேமிக்கின்றன.
  • முதன்மை பயிர்களின் அறுவடை காலத்திற்கு பின், வறட்சியான காலத்தில் பயிரிடப்படுகிறது.
  • விரைவாக வளர்ந்து, மண் வளத்தை பாதுகாக்கிறது.
  • மேற்கண்ட காரணங்களால் விவசாயிகள், பசுந்தாள் உரத்திற்காக பச்சை பயறு வகை செடிகளை பயிரிட தொடங்கியுள்ளனர்.
  • இதுகுறித்து, விவசாயிகள் சிலர் கூறுகையில், “ஆர்.கே.பேட்டை, திருத்தணி பகுதியில் சித்தகத்தி செடிகள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. அனைத்து பருவத்திலும் பயிரிடலாம். 15 – 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்; 45 முதல் 60 நாட்களில் அறுவடை செய்யலாம். விதைக்கான அறுவடை என்றால், பயிர் காலம், 130 நாட்கள். ஒரு ஏக்கரில், 600 கிலோ விதை கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு, 18 முதல், 20 டன் பசுந்தாள் உரம் கிடைக்கும்’ என்றனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *