திருத்துறைப்பூண்டி இயற்கை விவசாயப் பண்ணையில் பாரம்பரிய நெல் திருவிழா

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் இயற்கை விவசாயப் பண்ணையில் வரும் 22ஆம் தேதி பாரம்பரிய நெல் திருவிழா நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கு இயற்கை விஞ்ஞானி கோ.​ நம்மாழ்வார் தலைமை வகிக்கிறார்.​ ​காந்தி கிராம பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் என்.​ மார்க்கண்டன்,​​ பாரம்பரிய நெல் பிரசார ஒருங்கிணைப்பாளர் உஷா,​​ நாகை மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவர் சிக்கல் அ.​ அம்பலவாணன்,​​ விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் வலிவலம் சேரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

விதை நெல் வாங்க விரும்பும் விவசாயிகள்,​​ கிரியேட் இயக்குநர் ஆர்.​ ஜெயராமன்,​​ இயற்கை விவசாய பண்ணை,​​ ஆதிரங்கம்,​​ திருத்துறைப்பூண்டி.​ செல் 09443320954 என்ற முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *