என்றென்றும் ஒவ்வொருவருக்குள்ளும், இயற்கையிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் இயற்கை வாழ்வியல் அறிஞர் திரு. கோ. நம்மாழ்வார் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாறு என்பது ” புழுதியிலும் புழுதியாய் வாழ்பவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களுக்கான இன்றைய உலகை கட்டமைக்க பெரிதும் உதவியாக இருக்கும் நம்பிக்கை வழிகாட்டி என்பதில் யாருக்கும் ஐயமில்லை.
ஐயா அவர்கள் தன்னுடைய 76 ஆண்டுகால வாழ்வில் பல்வேறுபட்ட பயணங்களை மேற்கொண்டவர். அந்த பயணங்களில் மக்களிடம் தான் கற்றுக் கொண்ட முழு வாழ்வியல் அனுபவங்களையும் தன் கடைசி மூச்சு இந்த உலகை விட்டு பிரியும் தருணம் வரையில் , சுய நலம் பாராமல் அந்த பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்குமே கொண்டு சேர்த்தவர்.
ஐயா அவர்களின் இந்த அயராத முயற்சியில் பொதுமக்களின் பங்களிப்பு என்பது மிக மிக உயர்வானது. ஆரம்பத்தில் ஐயாவின் செயல்பாடுகள் இயற்கை வழி விவசாயத்தை பொதுமக்களிடம் சேர்ப்பதில் தொடங்கியது. பின்னர் அது மட்டுமே மக்களுக்கான இழந்த சுயசார்பு வாழ்வியலை மீட்க உதவாது. எனவே அனைவரின் வாழ்வியலும் இயற்கை என்பது ஒன்றாக கலக்க வேண்டும் என முடிவெடித்து, ” இயற்கை வாழ்வியலையே “ பரப்புரை செய்தார்
ஐயா அவர்களின் ஞானம் எல்லா துறையிலும் பரந்து விரிந்தது. மேலும் ஐயா அனைத்து விஷயங்களையும் பார்க்கும் கோணம் மற்றும் அணுகும் திறன் முற்றிலும் வேறுபட்டது. இதை ஐயாவுடன் நெருங்கிப் பழகிய பல லட்சம் மக்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட பார்வை மற்றும் அணுகும் திறன் தான் இன்றைய காலகட்டத்துக்கு மிகத்தேவையானது. எனவே இதை ஆவணப்படுத்தும் பணியை ” வானகம் ஒருங்கிணைப்பாளர்கள் “ ஏற்கனவே மேற்கொண்டுள்ளனர். ஐயா வாழ்க்கைப் பயணம் நீளமானதாகையால் அனைத்து கருத்துக்களையும் ஆவணப்படுத்த வேண்டியுள்ளது.

ஆகவே நம்மாழ்வார் ஐயாவுடன் பழகிய மக்கள், பயிற்சி எடுத்தவர்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள், குழந்தைகள், மாணவர்கள் , தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் ஐயாவின் “ வாழ்க்கை வரலாறு “ புத்தகத்திற்கு ஒத்துழைப்பு தரும்படி அன்புடனும், பணிவுடனும் கேட்டுக்கொள்கிறோம்.
கட்டுரையில் இடம்பெற வேண்டிய மாதிரி செய்திகள் :
**************************************************************
- ஐயாவால் உங்களுக்குள் நிகழ்ந்த மாற்றம்
- ஐயாவால் சமூதாயத்தில் நிகழ்ந்த மாற்றம்
- ஐயாவால் பரவப்பட்ட உங்களின் விவசாய தொழில் நுட்பங்கள் ( பஞ்சகாவியா, ஆட்டூட்டம்…..)
- ஐயாவால் சுனாமி போன்ற பேரழிவிலிருந்து விவசாய மக்களின் வாழ்க்கையில் ஒளிவிளக்கு ஏற்பட பெரிதும் துணை நின்ற தொழில் நுட்பம் மற்றும் குழுக்கள் , உதவி புரிந்த தொண்டு நிறுவன்ங்கள்
- ஐயாவால் நட்த்தப்பட்ட நடைபயணங்களும், அதனால் ஏற்பட்ட விளைவுகளும்
- போராட்டங்கள்
- மீட்கப்பட்ட சட்டங்களும் , வேம்பு போன்ற காப்புரிமைகள்
- ஐயாவால் உருவாக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களும், அதன் இன்றைய நிலையும்
- ஐயாவால் உருவான தனிமனிதர்கள்
- ஐயாவால் உருவாக்கப்பட்ட கொள்கைகள்
- ஐயாவால் மீட்கப்பட்ட தொழில் நுட்பங்கள், விதைகள் ( ஒற்றை நடவு போன்ற )
- ஐயாவால் கட்டமைக்கப்பட்ட இளைஞர் அமைப்புகள்
- ஐயாவால் உருவான பண்ணைகள்
இது போன்ற செய்திகளை கடிதம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் முடியாத பட்சத்தில் தொலைபேசி வாயிலாகவோ அனுப்ப வேண்டுகிறோம்.
குறிப்பு : அந்த செய்திகள் ஆதரத்துடன் உண்மையாக இருத்தல் நலம்.
மிகைப்படுத்தப்படாமல் எதார்த்தமாக இருத்தல் நலம். புகைப்படம், வீடியோ & ஆடியோ போன்றவைகள் இருந்தால் இன்னும் சிறப்பு.
மேலும் விபரங்களுக்கு : 9443575431
********************************************************
தங்களுடைய பதிவுகளை அனுப்ப வேண்டிய முகவரி :
ஜெ.கருப்பசாமி, 990, பெரிய கருப்பன் ரோடு,சிவகாசி – 626189.விருது நகர் மாவட்டம்.தொடர்பு எண் : 94435 75431.
மின்னஞ்சல் : vanagamnammalvarfoundation@gmail.com
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்