நஷ்டமின்றி விவசாயம் செய்கிறேன்!

 திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் – பெரியபாளையம் சாலையில், பண்ணை நடத்தி வரும், அனுராதா கூறுகிறார்:

  • சவுதி அரேபியா நாட்டில் பணிபுரிந்த நானும், என் கணவரும், ஆறு ஆண்டுகளுக்கு முன், இந்தியா வந்தோம். திரும்ப அவர் மட்டும் கிளம்பி சென்ற நிலையில், இங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்த நான், அதை விட்டு, இயற்கை விவசாயத்தில் இறங்கினேன்.
  • ஆரம்பத்தில், நிலத்தை திருத்தும் வேலைகளுக்கு, நிறைய பணம் செலவானது. பல்வேறு புத்தகத்தை படித்து, இயற்கை இடுபொருள் தயாரிப்பு முறையை தெரிந்து கொண்டேன்.
  • இந்தப் பண்ணையில், இரண்டு வகையான மண் உள்ளது. ஆரம்பத்திலேயே, மணல் கலந்த களிமண் பகுதியை, மரங்களுக்கு ஒதுக்கிட்டேன்.
  • களிமண் பகுதியை, நெல், காய்கறிகளுக்கு ஒதுக்கி, பயிர் செய்து வருகிறேன்.மா, வாழை மரங்களுக்கிடையில் ஊடுபயிராக, எலுமிச்சை, கொய்யா, சப்போட்டா உள்ளன. காய்கறிகள், பழங்களை, எங்கள் வீட்டில் வைத்து விற்றும், சில இயற்கை அங்காடிகளுக்கும் அனுப்பி வருகிறேன்.
  • பசுமையாக, 8 ஏக்கரையும் வைத்திருப்பதுடன், 23 சென்டில், பண்ணைக் குட்டை அமைத்து, மழைநீரை சேமித்து, அதில், கட்லா, ரோகு, புல்கெண்டை மீன்களையும் வளர்த்து வருகிறேன்.
  • பண்ணைக்குட்டை இருப்பதால், கிணற்றிலும் நீர் வற்றுவதில்லை.மேலும், 15 பசு மாடு, கன்றுகளை வளர்க்கிறேன். மாட்டு கொட்டகை அருகிலேயே, சிமென்ட் தொட்டியில், சாணம், கோமியம், இலைதழை, தென்னை மட்டை போட்டு மட்க வைத்து, உரமாக பயன்படுத்துகிறேன்.
  • அது போக, ஜீவாமிர்தம், அமுதக்கரைசல், பூச்சிவிரட்டி, மீன் அமினோ அமிலம், முருங்கை கரைசல் தயாரித்து பயன்படுத்துகிறேன்.
  • விளைபொருட்களை, ஒரு பகுதியையாவது மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால், நல்ல லாபம் எடுக்க முடியும். மதிப்புக் கூட்டல், நேரடி விற்பனை இரண்டும் தான், என் பலம்.
  • தர்ப்பூசணி மூலமாக ஆண்டுக்கு, 15 ஆயிரம் ரூபாய்; தேன் நெல்லி, நெல்லி பவுடர், நெல்லி ஜூஸ் மற்றும் நெல்லி வாயிலாக, 1 லட்சம்; அரிசி விற்பனையால், 44 ஆயிரம்; பந்தல் காய்கறி சாகுபடி, 50 ஆயிரம்; மாம்பழம், 80 ஆயிரம்; மற்ற காய்கறி, பழங்கள், 20 ஆயிரம் ரூபாய் என, மொத்தமாக, 8 ஏக்கரையும் சேர்த்து, ஆண்டுக்கு, 3 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
  • இதில், 50 ஆயிரம் ரூபாய் செலவு போக, 2.50 லட்ச ரூபாய் லாபம் வரும். என் கணவர் சொன்னபடி, நஷ்டம் இல்லாமல், விவசாயம் செய்து வருகிறேன்.

தொடர்புக்கு: 9940542355 .

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *