- இரண்டுமுறைகளில் மேல் உரமாக ஒரு ஏக்கர் நிலத்துக்கு 400 கிலோ முதல் 700 கிலோ தொழுஉரம் அல்லது மண்புழு உரத்தோடு 80 கிலோ வேப்பம்புண்ணாக்கு, ஒருகிலோ அசோபாஸ் அல்லது தலா 500 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து ஒருநாள் வைத்திருந்து தூவ வேண்டும்.
- மேல் உரம் கொடுத்து 10 முதல் 15 நாட்களுக்கு பிறகு, வேளாண்மைத்துறை வெளியிட்டிருக்கும் “பச்சைவண்ண அட்டையைப் (லீப் கார்டு) பயன்படுத்தி இலைகளின் நிறத்தைப் பார்க்க வேண்டும்.
- அதில் மூன்றாம் எண்ணுக்கு குறைவாக இருந்தால் மட்டும் மீண்டும் ஒருமுறை அதே உரக் கலவையைத் தெளிக்க வேண்டும்.
நெற்பயிரின் வளர்ச்சிக்கு இயற்கை முறை:
- மாதம் ஒருமுறை 20 லிட்டர் அமுதக்கரைசல் அல்லது 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை தண்ணீருடன் கலந்து விடலாம்.
- பயிரின் வளர்ச்சியைப்பொறுத்து 25 மற்றும் 30ம் நாட்களில் மட்டும் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மிலி “பஞ்சகவ்யா‘ என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.
அமுதக்கரைசல் தயாரிக்கும் முறை:
- மாடு ஒருதடவை போட்ட சாணம் (எந்த மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்).
- ஒரு தடவை பெய்த மாட்டுச் சிறுநீர் இவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக் கொண்டு அதில் ஒரு கைப்பிடி வெல்லம், ஒரு குடம் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
- 24 மணி நேரம் நிழற்பாங்கான இடத்தில் வைக்க வேண்டும்.
- இப்போது அமுதக்கரைசல் தயார்.
- ஒரு பங்கு அமுதக்கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.
- தெளிப்பானில் (டேங்க்) ஒருமுறை தெளிப்பதற்கான அளவு ஒரு ஏக்கருக்கு 10 தெளிப்பான் தெளிக்க வேண்டும். வாய்க்கால் நீரிலும் கலந்து விடலாம்.
– டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்