பஞ்சகவ்யா செய்முறை

இயற்கை உரமான பஞ்சகவ்யா செய்வது பற்றி ஹிந்து நாளிதழ் சிறப்பாக வெளியிட்டு உள்ளது.

இதனை, இந்த இணையத்தளத்தில் காணலாம்.

இங்கே, தமிழில்:

பஞ்சகவ்யவின் பார்முலாவும் தயாரிக்கும் வழியும்.

முதலில் 5 கிலோ பிரெஷ் பசுமாடு சாணம் எடுத்து கொள்ளவும்

அதில், 3 லிட்டர் பசு மூத்திரம் சேர்க்கவும்

அதில், 2 லிட்டர் பசும்பால் சேர்க்கவும்

அரை கிலோ பசும் நெய் சேர்க்கவும்

இந்த கூட்டில், மூன்று தேங்காய் இளநீர் சேர்க்கவும்

ஒரு டசன் நல்ல பழுத்த, அல்லது அழுகிய வாழை பழம் சேர்க்கவும்

இரண்டு லிட்டர் புளித்த தயிரை சேர்க்கவும்

சிறிது சுண்ணாம்பை (slacked lime) சேர்க்கவும்

கையளவு உயிர் மண்ணை (living soil) சேர்க்கவும்

கையளவு வெல்லம் சேர்க்கவும்

இந்த திரவத்தை, வேப்பம்குச்சி ஒன்றால் நன்றாக கலக்கவும். தினமும் திறந்து, சில நேரம் கலக்கவும். 20 நாட்களுக்கு பின் பஞ்சகாவ்யா  ரெடி. அதன் பின் பஞ்சகவ்யவை உபயோகம் செய்யலாம். 30-50 லிட்டர் நீரில் ஒரு லிட்டர் சேர்க்கலாம்

இதே பொருட்களை கொண்டு, பஞ்சகவ்யா தயாரிக்கும் (சிறிது வித்தியாசமான) இன்னொரு முறையை இங்கே காணலாம்.

Source: Hindu


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

4 thoughts on “பஞ்சகவ்யா செய்முறை

  1. Ambigapathi says:

    மேற்கூறியபடி தயார் செய்யப்பட்ட பஞ்சகாவியா எத்தனை ஏக்கர் நெல் பயிருக்கு பயன்படுத்தலாம் ?

  2. MuraliTharan says:

    U Can Use This . 30-50 லிட்டர் நீரில் ஒரு லிட்டர் பஞ்சகவ்யா சேர்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *