பயிர்ப்பூச்சி கட்டுப்பாட்டில் பவேரிய பேசியானா பூசணம்:

  •  பவேரிய பேசியானா பூசணம்  (Beauveria bassiana) எல்லா மண் வகைகளிலும் காணப்படுகிறது.
  • பூசணத்தின் வித்துக்கள் பூச்சி, புழுக்களின் மேல் பட்டவுடன் சாதகமான சூழ்நிலையில் அவை முளைத்து பூசண இழைகளைத் தோற்றுவிக்கின்றன.
  • இப்பூசணம் நொதிப் பொருட்களை உற்பத்தி செய்து மேற்புற தோலினை சிதைத்து பூச்சியின் உடலுக்குள் ஊடுருவிவிடுகிறது. அங்கு நச்சுப்பொருளை உற்பத்தி செய்து பூச்சியின் வயிற்றில் உள்ள பாக்டீரியாவை எளிதில் அழித்து, பூசணம் உடல் முழுவதும் வளர்ந்து பரவி பூச்சியைச் செயலிழக்கச் செய்து கொன்றுவிடுகிறது.
  • இப்பூசணம் மக்காச்சோள பயிரில் உட்சென்று நீர் உறிஞ்சும் குழாய்களில் தங்கி தாவர உட்பூசணமாகச் செயல்பட்டு இப்பயிரினைத் தாக்கும் தண்டு துளைப்பான்களை சிறப்பான முறையில் கட்டுப் படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
  • நன்மை செய்யும் இப்பூசணம் வணிக ரீதியில் பல்வேறு பெயர்களில் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
  • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தாவர நோயியல் துறையில் இப்பூசணம் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ விலை ரூ.100.
  • துகள் வடிவில் வழங்கப்படும் இப்பூசணத்தை மண்வழியாகவும், இலை வழியாகவும் பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
  • ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் 20 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து விதைக்கும் முன் மண்ணில் இடவேண்டும்.
  • இலையை உண்ணும் புழுக்கள், சாறு உறிஞ்சும் பூச்சிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஒரு லிட்ட ருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவும்.

(தகவல்: த.தினகரன், கோ.அர்ச்சுணன், வானொலி உழவர் சங்க செய்திக்கதிர், அக்டோபர் 2011) -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

நன்றி: தினமலர்

பவேரிய பேசியானா பற்றி மேலும் தெரிந்து கொள்ள:  http://en.wikipedia.org/wiki/Beauveria_bassiana

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பயிர்ப்பூச்சி கட்டுப்பாட்டில் பவேரிய பேசியானா பூசணம்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *