இயற்கை வேளாண் முறையில் பயிர் வளர்ச்சிக்கு பஞ்சகவ்யம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
கிருஷ்ணகிரி அருகே வேளாண்மை மற்றும் தோட்டக்கலை மாணவிகள் பஞ்சகவ்யம் என்னும் வளர்ச்சி ஊக்கி கரைசலின் பயன்பாடு, அதன் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை செய்முறை விளக்கம் அளித்தனர்.
கிருஷ்ணகிரியை அடுத்துள்ள கே.பூசாரிப்பட்டியில் உள்ள விவசாயி மணியின் நிலத்தில், ஆதிபராசக்தி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை மாணவிகள் சாந்தி, வினோதினி, புனிதா, நந்தினி, மகாலட்சுமி, புவனேஸ்வரி ஆகியோர், பஞ்சகவ்யம் என்னும் வளர்ச்சி ஊக்கி கரைசலை விவசாயிகளுக்கு செய்து காட்டினர்.
பின்னர் அதன் நன்மைகள் குறித்து அவர்கள் கூறியது:
- பஞ்சகவ்யம் என்பது மாட்டுச் சாணம், மாட்டு சிறுநீர், பால், தயிர், வெல்லம், நெய், வாழைப்பழம், இளநீர் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கும் கரைசலாகும்.
- இந்தக் கரைசலை அனைத்து வகையான வேளாண் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
- பஞ்சகவ்ய கரைசல் இயற்கை வேளாண் முறை சாகுபடியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
- இது செடியின் வளர்ச்சியை உயர்த்துகிறது.
- மேலும், பயிர்களுக்கு நோய் பற்றா நிலையை கொடுக்கும்.
- அத்துடன் இந்தக் கரைசல் பயிர்களின் பூக்கள் உருவாவதற்குத் தூண்டப்படுகிறது.
- இதைப் பயன்படுத்துவதால், பழச்செடிகள் ஆண்டு முழுவதும் பூக்கள் பூத்துக்கொண்டே இருக்கும்.
- பழங்கள் நல்ல மணத்துடனும், சதையுடனும் இருக்கும். மேலும், மகசூல் அதிகரிக்கும்.
- விதை, நாற்றுகள் நேர்த்தி செய்வதற்கும் இது பயன்படுகிறது. இந்தக் கரைசலை பயிர்களின் அனைத்து வளர்ச்சிப் பருவங்களிலும் தெளிக்கலாம் என்றனர் அவர்கள்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்