பயோ ஆக்சி – இயற்கை பயிர் ஊக்கி

பயோ ஆக்சி என்றால் என்ன?

 • இவை இயற்கையாக ஆக்சிஜன் வெளியிடும் கனிமங்கள்.
 • தொடர்ச்சியாக 6 மாதத்திற்கு ஆக்சிஜனை வெளியிட்டு உயிரற்ற ரசாயன மண்ணையும் உயிருள்ள இயற்கை நல மண்ணாக மாற்றும் அற்புத படைப்பு.
 • 100% இயற்கையானது. சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பானது.

பயோ ஆக்சியின் பயன்கள்:

 • விதை முளைப்புத்திறன் அதிகரிக்கிறது. நாற்றின் வளர்ச்சியை ஊக்குவித்து, தரமான நாற்றாக மாற்றுகிறது.
 • மண்ணில் காற்றோட்டம், இரு மண்துகள்களுக்கு இடையில் உள்ள இடைவெளி, நீர்பிடிப்புத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துகிறது.
 • இதன்மூலம் வேரின் சுவாசத்தையும், வளர்ச்சியையும் அதிகப்படுத்துகிறது. மொத்த நுண்ணுயிர்களையும் அதிகப்படுத்துவதால், அவை மண்ணில் வாழ தேவையான சூழ்நிலையை உருவாக்குவதால் பலவகையான ரசாயன கழிவுகளையும், எச்சங்களையும் எளிதாக சிதைத்து மண்ணோடு மண்ணாக மக்கச் செய்துவிடுகிறது. (ரசாயன உரம், பூச்சி, நோய் மற்றும் களைக்கொல்லியின் கழிவுகள்).
 • மண்ணிலுள்ள மற்றும் மண்ணில் இடும் அனைத்து சத்துக்களும் என்சைம்கள், ஹார்மோன்கள், அமினோ அமிலங்கள் ஹ்யூமஸ், இயற்கை அமிலங்கள் அனைத்தையும் பயிர் எளிதில் முழுவதும் எடுத்துக்கொள்ள வழி செய்கிறது.
 • நிலத்தடி நீரைத் தூய்மைப்படுத்தி, மண்ணில் கார, அமில, உவர்த்தன்மையையும் சரிசெய்து தூய்மையாக்குகிறது.
 • பயிரின் ஒளிச்சேர்க்கையின்போது வேருக்கு அருகில் உள்ள நீருக்கு ஆக்சிஜன் மிகவும் இன்றியமையாததாகையால் பயிரின் உணவு உற்பத்தி நன்கு பெருகி விளைச்சல் அதிகரிக்கிறது.
 • வைரஸ் நோய் தாக்கிய ஆரம்ப நிலையில் வைரஸ் கிருமி அடுத்த நல்ல ஆரோக்கியமான பயிரின் செல்களுக்கு பரவாமல் தடுத்து நோயை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்துகிறது.
 • களிமண் நிலத்தில் நீர் கடத்துத்திறனை அதிகப்படுத்தி ஆக்சிஜன் மற்றும் சத்துக்கள் பயிருக்கு எளிதில் கிடைக்கும்படி செய்கிறது.
 • ஏற்கனவே மண்ணில் பல ஆண்டுகளாக தங்கி படிந்துள்ள ரசாயன கழிவுகளையும் எளிதில் மக்க துணைபுரிந்து மண் புதிதாக, தூய்மையான காற்றை சுவாசிக்கும்படி செய்து பயிருக்குத் தேவையான ஆக்சிஜனை தொடர்ந்து அளிக்கிறது.
 • மண்ணில் நன்மை செய்யும் உயிர்களின் புகலிடமாக மாறி, உயிருள்ள இயற்கை மண்ணாக மாற்றுகிறது. பூக்கள், பிஞ்சுகள், கிழங்குகள், தானியங்கள் அனைத்தின் எண்ணிக்கையையும் கணிசமாக உயர்த்துவதால் விளைபொருட்களின் எடையும் அதிகரிப்பதால், விளைச்சல் 40% முதல் 60% வரை உயர்கிறது.
 • பயிரின் விளைச்சல் கொடுக்கும் திறனை முழுமையாக வெளிக்கொணர உதவுகிறது.

பயன்படுத்தும் முறை:

 • எல்லாப் பயிர்களுக்கும், எல்லாவகை மண் நிலங்களுக்கும் ஏக்கருக்கு 1 கிலோ 6 மாதத்திற்கு ஒரு முறை மணலுடன் கலந்தோ, இயற்கை (அ) ரசாயன உரங்களுடன் கலந்தோ இடலாம்.
 • மரப்பயிர்களுக்கும் பழவகை பயிர்களுக்கும் 1 மாதத்திற்கு 3-10 கிராம், பயிர் வயது, மண்வளம் பொருத்து 6 மாதத்திற்கு ஒரு முறை.
 • 7 முதல் 10 நாட்களுக்கு மிகாமல் நீர் பாய்ச்சுவது அவசியம்.

இந்த பயோ ஆக்சியை பயன் படுத்திய மதுரையை சேர்ந்த விவசாயி ஐயப்பன் கூறுகிறார் – “அடியுரமாக பயோ ஆக்சி அரை கிலோவுடன் ரசாயன உரங்களை சேர்த்து பயன்படுத்தினேன். இதுவரை என் அனுபவத்தில் கண்டிராத விளைச்சலாகிய 20 மூடை சின்னவெங்காயம் அரை ஏக்கரில் கிடைத்தது. அதாவது 12.5 மூடைகள் கிடைக்க வேண்டிய இடத்தில் 20 மூடைகள் என்றால் 60% அதிக விளைச்சல்.

ஒரு முறை பயோ ஆக்சி பயன்படுத்தியதற்கே இந்த விளைச்சல் என்றால் இன்னும் 2 முறை பயன்படுத்தி இருந்தால் விளைச்சல் எந்த அளவு அதிகரித்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.”

மேலும் விவரங்ககளுக்கு: ஐயப்பன், மதுரை-625 001. அலைபேசி எண்: 094878 01515.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *