தர்மபுரி மாவட்டத்தில் பயிர்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, பஞ்சகவ்யா பயன்படுத்த வேண்டும் என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
பருத்தியில் தொழில் நுட்பங்கள், பூச்சிமருந்து மற்றும் ரசாயன உரங்களை குறைத்து, பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பஞ்சகவ்யம் பயன்படுத்த வேண்டும்.
விவசாயிகள் தொழுவத்திலும், பண்ணையிலும் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு பயிர் ஊக்கியான பஞ்சகவ்யம் தயார் செய்யலாம்.
தயிர் ஊறல் ஊட்டமேற்றிய தொழுஉரத்தை பயிர்களுக்கு உபயோகிப்பதால், பூச்சிதாக்குதல் குறைந்து மகசூல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.
பஞ்கவ்யம் எல்லா பயிர்களுக்கும் பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சிக்கு எதிர்ப்பு கொடுக்கக் கூடியதாகவும் உள்ளதாக பாப்பாரப்பட்டி வேளாண் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
பஞ்சகய்வா தயாரிக்கும் முறை பற்றி இங்கே படிக்கலாம்
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்