பார்தேனியம் என்ற செடியை நாம் எல்லா இடங்களிலும் பார்க்கிறோம். ரயில்வே track ஓரமாய், பஸ் ஸ்டான்ட்களில், ஸ்கூல் விளையாட்டு திடல்களில் என்று, எல்லா இடங்களிலும் பார்தேனியம் இருக்கிறது.
இந்த செடி, நம் நாட்டு செடியே இல்லை.
1960 வருடங்களில், நம் நாட்டில், உணவு பற்றாக்குறை தலை விரித்து ஆடியது. அப்போது, அமெரிக்க, PL480 என்ற வகையில், அமெரிக்கா நாட்டில் இருந்து, கோதுமை இறக்கு மதி ஆயிற்று. அந்த கப்பல்களில், இந்த செடியின் விதையும், நம் நாட்டுக்கு வந்து சேர்ந்தது. மிக வேகமாக வளரும் இந்த செடியால், தோல் விதிகள், அலர்ஜி, ஆஸ்த்மா போன்ற நோய்கள் நிறைய பேர்களுக்கு வருகிறது. பெங்களூர் போன்ற உயரம் அதிகமான ஊர்களில், பார்தேனியம் பூவின் மகரந்த பொடிகள், சிறுவர்களுக்கும், வயதானவர்களுக்கும் ஆஸ்த்மா, மூச்சு இழுப்பு போன்ற நோய்களை தருகின்றன. பயிர் விளையும் நிலங்களில் வளர்ந்து, சாகுபடி 40 % வரை குறைக்கின்றன. தக்காளி, கத்திரி, பீன்ஸ் போன்ற செடிகளில், பூக்கள் பூப்பது குறைகின்றன.
எத்தனையோ முயற்சி செய்தும், இந்த செடியை அழிக்க முடியவில்லை. மிக வேகமாக வளரும் இந்த செடி, வாழ்நாளில், பத்தாயிரம் விதிகளை உண்டு பண்ணும். செடியை பிய்த்து போட்டாலும், திரும்ப வளரும் சக்தி கொண்டது. இரண்டு மீட்டர் வரை வளரும். இந்த செடி ஒரு இடத்தில வந்து விட்டால், மற்ற எல்லா செடிகளும் சிறிது நாளில் மடிந்து விடும்.
இந்த செடியும் “வெற்றிக்கு” காரணம் என்ன என்றல், இந்த செடிக்கு, இந்த மண்ணில், இயற்கையான எதிரி எதுவும் இல்லை. இதனால், விஞானிகள், இந்த செடியின் பூர்விகமான மேசிகோவில் எதிரியை தேடினர். Mexican beetles (Zygogramma bicolorata) என படும் ஒரு விதமான பூச்சி பார்தேனியம் எதிரி என்று கண்டு பிடித்தனர். பத்து முதல் பதினைந்து நாளில் வளரும் இந்த பூச்சி, பார்தேனியம் செடி இலைகளை, ஒரு பிடி பிடித்து விடுகிறது. விஷத்தை விஷம் மூலம் முறியடிக்க செய்வது போல், மேசிகோ பூச்சி மூலம் மெக்ஸிகோவிளிரிந்து வந்த செடியை தோற்கடிக்கலாம்.
அது சரி, இந்த பூச்சி இந்தியாவில் எங்கு கிடைக்கும்? இந்த பூசிக்கு எதாவது எதிரி இருக்கிறதா? இந்த பூச்சி, பக்கத்தில் உள்ள மற்ற செடிகளை கபளீகரம் செய்யுமா? இந்த கேள்விகள் எல்லாம் இன்னும் பதில் இல்லை.
ஆதாரம: விக்கிபீடியா
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
good article