பார்தேனியம் அரக்கனை பற்றி ஏற்கனவே நாம் படித்துள்ளோம்.
பார்தேனியம் இப்போது சாலை ஓரங்களிலும் பொது இடங்கள் இருந்து மெதுவாக வயல்களுக்கு வந்து கொண்டு இருக்கிறது.
இதனை அவ்வளவு எளிதாக கட்டுபடுத்துவது இயலாது. இதற்கு மெக்சிகோ வில் இருந்து ஒரு வகைக்கான வண்டு Mexican beetles (Zygogramma bicolorata) இயற்கை யான எதிரி. ஆனால் இந்த வண்டுகள் அவ்வளவு எளிதாக இங்கே கிடைப்பது இல்லை.
இப்போது, இதற்கு இன்னொரு ஒரு தீர்வு கண்டு பிடிக்க பட்டு உள்ளது. மா இலைகளை (15%) அரைத்து நீரில்கலந்து பார்தேனியம் மீது தெளித்தால் நல்ல பயன் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடுத்து உள்ளார்கள். நான் இதனை முயற்சி செய்து பார்த்ததில் ஒரு வாரத்தில் செடிகள் காய ஆரம்பித்ததை கவனித்தேன். நீங்கள் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும். இந்த முறை வேலை செய்யும் என்றால், அரக்கன் இருந்து நாம் விடுதலை பெறலாம்!
இதை பற்றிய விவரங்களை இங்கே படிக்கலாம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
One thought on “பார்தேனியம் அரக்கனை ஒழிப்பது எப்படி?”