பொன்னீம் பூச்சிக்கொல்லி மூலம் கட்டு படுத்த முடியும் பூச்சிகள்

இயற்கை பூச்சி கொல்லி ஆகிய பொன்னீம் பற்றி நாம் ஏற்கனவே படித்து இருக்கிறோம். எளிமையாக தயாரிக்கப்படும் இந்த பூச்சி கொல்லி உபயோகம் செய்த விவசாயிகளின் கருத்துகளை தமிழ் நாடு விவசாய பல்கலை கழகம் வெளி இட்டுஉள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகேயுள்ள கொழுமண்ணிவாக்கம் கிராமம் முழுக்கவே ‘பொன்னீம்’ பூச்சிக்கொல்லியை பயன்படுத்தி பலன் கண்டு வருகிறது. கிராமத்தைச் சேர்ந்த ‘டான்வா பண்ணை மகளிர் குழு’ என்ற அமைப்பின் தலைவி உமாமகேஸ்வரி அதைப்பற்றி மகிழ்ச்சி பொங்க பேசினார்.

“நடவு நட்ட ரெண்டாவது மாதம் வெள்ளை தத்துப் பூச்சியும், குருத்துப் புழுவும் அதிகமாக இருந்தது. சரி லயோலா காலேஜ் மருந்தை அடித்துத்தான் பார்ப்போமென்று அடித்தேன். பயிருக்கு எமனா இருந்த எல்லா பூச்சி, புழுவும் மூணாம் நாளே செத்துப் போயிவிட்டது. ஏக்கருக்கு 35 மூட்டை நெல்லும் விளைந்தது.” என்கிறார் அவர்.

தயாரிக்கும் முறை

இந்த பொன்னீம் தயாரிப்பு மிகமிக எளிதானதாகவே இருக்கிறது. வேப்ப எண்ணெய் 45%, புங்கன் எண்ணெய் 45%, சோப்புக் கரைசல் (ஒட்டும் திரவம்) 10% ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, நன்கு கலக்கினால் உடனடியாக பொன்னீம் தயார்.

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பொன்னீம் என்கிற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும். 10 லிட்டர் கொள்ளளவுள்ள தெளிப்பானில் முதலில் 300 மில்லி பொன்னீமை ஊற்றிவிட்டு பிறகு 10 லிட்டர் தண்ணீரை ஊற்றவேண்டும். இப்படி செய்தால் பொன்னீம் மருந்து தண்ணீரில் நன்றாக கலந்துவிடும் மிண்டும் ஒரு குச்சியைக் கொண்டு நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் வைத்து கலக்கி, அதன் பிறகு கூட தெளிப்பானில் ஊற்றிக் கொள்ளலாம்.

ஒரு ஏக்கருக்கு ஒன்றறை லிட்டர் வரை தேவைப்படும்.
பொன்னீம் கட்டுப்படுத்தும் பூச்சிகள்:

அசுவினி:

இளம் இலைகளின் அடிப்பகுதியில் மற்றும் குருத்துக்களின் நுனிப்பகுதியில் காணப்படும்.

காய்த் துளைப்பான்:

தக்காளி, கத்திரி, வெண்டை மற்றும் மிளகாய்ச் செடிகளைத் தாக்கும் தன்மை உடையது. இதன் பாதிப்பால் விளைச்சல் குறையும்.

படைப்புழு:

இவை பயிரின் இலைகளை உண்ணும். இந்தப் புழு தாக்கிய இடத்தைப் பார்த்தால் மாடுகள் மேய்ந்தது போல இருக்கும். பொன்னீமைக் கண்டதுமே படைப்புழு நடுங்கிவிடும்.
நெல் தத்துப்பூச்சி, நெல் தண்டு துளைப்பான் ஆகியவற்றையும் பொன்னீம் கட்டுப்படுத்துகிறது.

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் வெளியீடு

இயற்கை பூச்சி கொல்லி பற்றிய மற்ற இடவுகளை இங்கே பார்க்கலாம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *