திரு P.P சனல் குமார் கேரளாவை சேர்ந்தவர் அவர், மண் புழு உரம் தயாரிப்பில் ஒரு புதுமை கண்டு பிடுத்து இருக்கிறார்.
பொதுவாக, மண் புழு உரம் செய்ய, மண்ணில் பள்ளம் தோண்டி செய்வார்கள். இவர், அதற்கு பதிலாக, வேறு வழி பயன் படுத்துகிறார். துணி உணர்த்தும் கொடியில் சிறு சிறு polyethene பைகளை தொங்க விடுகிறார். அவற்றில், மண்ணையும், இல்லை தழைகளையும் நிரப்பி, 100 முதல் 200 மண் புழுக்களை விடுகிறார். மாட்டு சாணத்தையும் நன்றாக சேர்கிறார். ஐந்து நாட்கள் பின்பு சிறிது நீர் தெளிக்கிறார். 45 நாட்கள் பின்பு மண்புழு உரம் உபயோகத்திற்கு ரெடி.
இந்த பிளாஸ்டிக் பைகள், நிலத்திலிருந்து ஐந்து அடி உயரத்தில் தொங்குகின்றன. துணி கயறு கட்டியிருக்கும் இரண்டு முனையிலும், சிறிது கிரீஸ் மற்றும் சிறிது பூச்சி மருந்து தடவுகிறார்.
இந்த முறையினால், பல நன்மைகள் உள்ளன:
- மண்புழுக்கள் கயிறில் இருந்து தொங்குவதால், எலி போன்றவற்றால் தொந்தரவு வருவதில்லை.
- கயிற்றின் இரண்டு முனையிலும், பூச்சி மருந்து தடவுவதால், எறும்பு, கரையான் போன்றவை மண் புழுகளிடம் போக முடியாது.
- பிளாஸ்டிக் பைகளில், ஓட்டைகள் இருப்பதால், காற்று உள்ளே போகிறது. மண்புழு உரத்தையும், எளிதாக எடுத்து உபயோகிக்கலாம்.
மேலும் தகவல்களுக்கு, அணுகவும்: திரு. ப.ப. சனல் குமார், புதன்புறாக்கள் வீடு, செரும்பரம்பா போஸ்ட், தலைச்சேரி, கண்ணூர், கேரளா, தொலைபேசி: 04902463644.
நன்றி: ஹிந்து (ஆங்கிலத்தில்)
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்