மண் பூஞ்சனகளை கட்டுபடுத்தும் எளிய வழி

மண்ணில் இருந்து பயிர்களுக்கு வரும் பூஞ்சன்களால், பயிர்களுக்கு ஏராளமான பாதிப்புகள் உண்டாகின்றன. இதை தடுக்க, solarization of soil என்ற முறை கையான்றால், Fusarium Oxysporum,  Macrophomina Phaseolina போன்ற பூஞ்சணங்கள் கட்டுபடுத்த முடியும்.


இந்த முறை படி, நிலத்தின் மீது, வெயில் உள்ளே போகும் படியான  transparent polythene ஷீட்களை குறைந்தது 15 நாட்கள் நிலத்தின் மீது போட்டு வைக்க வேண்டும். கற்களை மேல் வைத்து ஷீட்கள் நகராமல் பார்த்து கொள்ள வேண்டும.

இப்படி செய்தால் நிலத்தில் 1 அடி வரை உள்ள பூஞ்சணங்கள் மடிந்து விடும். Polythene ஷீட்கள் கீழே, வெயில் மூலம் தட்ப வெப்ப நிலை அதிகமாக உயர்ந்து, பூஞ்சணங்களை கொல்கின்றது.

Solarization பண்ணுவதற்கு முன், மண்ணிற்கு நீர் பாய்ச்சினால், மேலும் பயன் கொடுக்கும். இந்த முறையினால், களைகளும் அழிந்து விடும்.

இந்த முறை மேற்கத்திய நாடுகளில் விவசாயிகள் பயன் படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் இந்த முறை எங்கேயாவது பயன் படுத்துகிறார்களா என்று தெரிய வில்லை. குளிர் தேசங்களில், மண் புழு போன்ற, விவசாயிகளுக்கு உதவும் பூச்சிகள் கிடையாது. இங்கே, இந்த முறையால், அவையும் மடிந்து விடுமோ தெரியாது.

இந்த முறை பற்றிய தகவல்களை அறிய இந்த இணைய தளங்களை அணுகலாம் (ஆங்கிலத்தில்)

  1. http://www.gardenplansireland.com/forum/about1213.html
  2. en.wikipedia.org/wiki/Soil_solarization
  3. http://www.ehow.com/how_4037_solarize-soil.html
  4. http://landscaping.about.com/od/weedsdiseases/qt/killing_weeds.htm

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *