வீட்டிலேயே இயற்கை விவசாயம்

சென்னை, கோவை மாநகராட்சி பகுதிகளில், தோட்டக்கலைத்துறை மூலம், நகர்ப்புற காய்கறி அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 • வீட்டு மாடி, காலி இடங்களில் ‘நீங்களே செய்து பாருங்கள்’ என்ற திட்டத்தில் காய்கறி வளர்க்கலாம்.
 • இதற்கு 2,650 ரூபாய் செலவாகும்.
 • அதில், 50 சதவீதம் மானியம் போக, மீதமுள்ள தொகையை மக்கள் செலுத்தினால் போதும்.
 • பாலித்தீன் கவர் 20, தென்னை நார் கழிவு, விதை, இயற்கை உரம் என, 15 வகையான பொருட்கள் வழங்கப்படும்.
 • தென்னை நார் கழிவுடன், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் இயற்கை உரத்தை கலந்து, ஒரு வாரத்துக்கு தண்ணீர் தெளித்து மட்க செய்ய வேண்டும்.
 • அதன்பின், விதைப்பு செய்ய வேண்டும்.
 • செடி வளர்ந்ததும், ஒவ்வொரு பாலித்தீன் பையிலும் மட்கிய நார் கழிவை நிரப்பி, செடியை நடவு செய்ய வேண்டும்.
 • தினமும் தண்ணீர் தெளித்து பராமரித்தால் போதும்.
 • பூச்சி, புழு தாக்குதலுக்கு வேப்ப எண்ணெய் கலவையை ‘ஸ்பிரே’ செய்ய வேண்டும்.
 • ரசாயன மருந்தில்லாமல், காய்கறியை இயற்கையாக விளைவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.
 •  இந்த திட்டத்தில் வீட்டு மொட்டை மாடியிலும் விவசாயம் செய்யலாம்.
 • திட்டம் குறித்த, மேலும் விவரங்களுக்கு, துணை இயக்குனர் அலுவலகம், தோட்டக்கலைத்துறை, நெ.8, தடாகம் ரோடு, கோவை என்ற முகவரியிலும், 04222453578 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

6 thoughts on “வீட்டிலேயே இயற்கை விவசாயம்

 1. Mrs Kanimozhi Natarajan says:

  Grand good morning! I am erode district, i would like to start a organic terace garden in our house. In that i need informations regarding that. could you share the details about the ” Veetileye Iyarkai Vivasayam “. Kindly send me your mail to my email ID.

  • d.maadhavarajan says:

   I need details to start organic garden .tks

   Tamizhan endra perumaiyutan
   Tamizhanukku vuriya porupputan
   Maadhavarajan.d

 2. J Mahendran says:

  Sir, I have lots of interest in agriculture but I doesn’t know how to do it. So, I request you to send the step by step procedure to plant an terrace garden….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *