வீட்டுத் தோட்டத்தில் பூச்சி வந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். அதிகச் செலவில்லாமல் இயற்கை முறையில் நாமே பூச்சி விரட்டியைத் தயாரிக்கலாம்.
வீட்டில் பெரிய அளவில் காய்கறித் தோட்டம் இருப்பவர்களுக்கு இந்த முறை நன்கு உதவும்.
இயற்கை பூச்சி விரட்டியைத் தயாரிப்பதற்கு மூன்றிலிருந்து ஐந்து வகை ஆடு தின்னாத இலைதழைகள் அல்லது கிள்ளினால் பால் வரும் இலைதழைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக அத்தி, பப்பாளி, வாதமடக்கி, ஆவாரை, வரிக்குமட்டி, நுணா (மஞ்சணத்தி) ஆகிய இலைகளை எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு இலையிலும் தலா 1 கிலோ அல்லது தேவைக்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த இலைகளுடன் கோமியம் 10 லிட்டர். சாணம் ஒரு கைப்பிடி எடுத்துக்கொள்ள வேண்டும். மேற்கண்டவற்றை முதலில் சேகரித்துக்கொள்ளவும். இப்போது பூச்சி விரட்டித் தயாரிக்கும் முறையைப் பார்ப்போம்:
- இலைதழைகளை நறுக்கிக் கோமியம், சாணக் கரைசலில் 15 நாட்களுக்கு ஊற வைக்க வேண்டும்.
- ஊற வைத்த கலவையை 16-வது நாளில் வடிகட்டவும்.
- இதைப் பூச்சி, பூஞ்சைகளை விரட்டும் வகையில் பயிர்கள் மீது தெளிக்க வேண்டும்.
- இந்தப் பூச்சி விரட்டியின் அடர்த்தியான கரைசலை அப்படியே தெளிக்கக் கூடாது. ஒரு லிட்டர் பூச்சி விரட்டியை 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.
நன்றி: பினாங்கு பயனீட்டாளர் சங்க ‘இயற்கை வேளாண்மை’ வழிகாட்டி
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
நான் ஒரு இளம் விவசாயி,தங்கள் வலைதளம் மூலமாக அன்றாட விவசாய செய்திகள் தெரிந்து கொள்கிறேன்.தங்கள் தளத்தை புக்மார்க் செய்து தினமும் ஒரு 10 முறையாவது தங்கள் தளத்தை பார்வையிடுவேன்.மிக உபயோகமாக உள்ளது.தங்களுக்கு ஒரு வேண்டுகோள் ஒவ்வொரு நாட்டிலும் பயண்படுத்தும் இயற்கை விவசாய முறையை ஆங்கிலத்தில் இருந்து தமிழிற்கு மாற்றி பதிவுகள் ஏற்றவும் மிக பயணாக இருக்கும். மிக்க நன்றி
அய்யா,
நன்றி. உங்கள் கருத்தை படிப்பதற்க்கு மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் android போன் வைத்திருந்தால் பசுமை தமிழகம் அப்ளிகஷன் இன்ஸ்டால் செய்து எளிதாக உங்கள் மொபைல் போனில் படிக்கலாம்.
நீங்கள் கேட்ட படி மற்ற நாடுகளின் இயற்கை விவசாய அனுபவங்களையும் பாடங்களையும் தமிழ் படுத்தி பதிவு செய்கிறோம்.
நன்றி!
அட்மின்
ஐயா இது பழைய செய்தி,சில ஆண்டுகளுக்கு முன்பே இதனை பயிற்சி யாக கொடுத்து உள்ளேன்.
தங்களது தகவல் பயனுள்ளதாக உள்ளது நன்றி Admin
வணக்கம் ஐய்யா
நான் B.E ECE final year படிக்கும் மாணவன், நான் பொறியியல் படிப்புக்கு இணையாக இயற்கை விவசாயம் செய்யவதை நினைக்கிறேன்.
எங்கள் சொந்த ஊரில் சிறிது நிலம் உள்ளது ஆனால் தற்பொழுது சில ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தால் விவசாயம் செய்ய முடியாமல் நிறுத்தி வி்ட்டார் என் த்தையார்.
இந்த சூழ்நிலையில் நான் எவ்வாறு விவசாயத்தை துவங்குவது என்று புாியவில்லை
தாங்கள் எனக்கு எவ்வாறான விவசாயம் செய்தல் சரியாக இருக்கும் வழி காட்டுங்கள் இயா.
Mobile: 919442257018
gmail : aranganathan5123@gmail.com
நன்றி
வணக்கம் ஐயா

தாங்கள் எனக்கு எவ்வாறான விவசாயம் செய்தல் சரியாக இருக்கும் வழி காட்டுங்கள் ஐயா.
Mobile: 919442257018
gmail : aranganathan5123@gmail.com
நன்றி