உலகத்தில் இப்போது 7.62 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் இன்றைய நுகரும் வேகத்தில் இன்றே 1.7 உலகம் தேவை என்று கண்டு பிடித்து உள்ளார்கள். அதாவது, உலகம் நமக்கு கொடுக்க கூடிய அளவை விட அதிகம் எடுத்து கொண்டு இருக்கிறோம். என்பது இல்லாமலே..
இந்தியாவும் இந்த போக்கிற்கு விலக்கு இல்லை..
இதற்கு கரணங்கள் என்ன?
- பொருள் சேர்க்கும் கலாச்சாரம் (Consumer, materialistic culture). வேண்டுமோ இல்லையோ கவலையே படாமல் வாங்குவது.
- பொதுவாக மக்கள் கையில் 30 ஆண்டுகள் முன்பு இருந்ததை விட பணம் அதிகம் இருக்கிறது. வாரம் ஒரு முறை மாமிசம் சாப்பிட்டவர்கள் இப்போது தினமும் ஆம்பூர் கோழி இல்லை என்றால் மட்டன் பிரியாணி சாப்பிடுகிறார்கள். சைவம் சாப்பிடுறவர்களால உலகில் 50% சுற்று சூழல் கெடுதல் குறைவு (50% less carbon footprint) என்கிறது ஆய்வு
- வங்கிகள் கார் கடன் கொடுத்து எல்லோரும் கார் வாங்கி ஆபீஸ் செல்லவே பயன் படுத்துகிறார்கள். நடப்பது, பொது போக்குவரத்துகளான ரயில் பஸ்ஸில் போவது குறைந்து வருகிறது. இதனால் பெட்ரோல் டீசல் பயனும் அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிக்க படுகிறது.
- நிலத்தடி நீர் என்பது எத்தனையோ காலமாக பிக்ஸ்ட் டெபாசிட் ஆக இருந்து வந்த நீர். இதை நாம் திரும்பி நிரப்பாமல் உறுஞ்சி கொண்டே இருக்கிறோம்.
இப்படி எல்லாம் இருப்பதால் இந்தியா இன்னும் 20 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் அதிகம் பாதிக்க பட்ட நாடாக (Environmentally stressed) மாறும் பாதையில் நாம் சென்று கொண்டு இருக்கிறோம்.
50 வருடம் முன்னாள் வந்த சிவாஜி படத்தில் சென்னை மரீனா பீச்சில் அவர் பாடி கொண்டே போகும் காட்சிகளை டீவீயில் பார்க்கலாம். ரோடில் 4-5 கார் மட்டுமே செல்லும். கடற்கரையில் 10 பேர் இருப்பர். இப்போது நினைத்து பார்க்க முடியாமல் கூட்டமும் கார்களும்.
நாம் எப்படி இந்த உலகத்தை பெற்றோமோ, அதை விட மிக மோசமான நிலையில் இந்த உலகை அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்ல போகிறோம்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்