உளுந்து சாகுபடி டிப்ஸ்

உளுந்து சாகுபடியில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

 • பழநி வட்டார விவசாயிகள், நல்ல வடிகால் வசதியுள்ள அனைத்து நிலங்களிலும் உளுந்து சாகுபடி செய்யலாம்.
 • செப்டம்பர்-அக்டோபர் காலங்களில் வம்பன் 2, 3, 4 மற்றும் ஏபிகே 1 ஆகிய ரகங்களை பயிரிடலாம்.
 • ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் டிஎம்வி 1 ரகத்தை பயிரிடலாம்.
 • பிப்ரவரி-மார்ச் மாதங்களில் வம்பன் 4 மற்றும் டிஎம்வி 1 ரகத்தை பயிரிடலாம்.
 • எக்டேருக்கு 20 கிலோ விதையை 30க்கு10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.
 • விதைகளை துத்தநாக சல்பேட் 100 பிபிஎம் கரைசலில் 1 கிலோ விதைக்கு 1 லிட்டர் கரைசல் என்ற அளவில் 3 மணிநேரம் ஊற வைத்து விதைக்க வேண்டும்.
 • ஊறிய விதைகளை நிழலில் ஆரம்ப ஈர நிலை வரும் உலர வைத்து 1 மாதம் வரை உபயோகிக்கலாம்.
 • 1 எக்டேருக்கு தேவையான விதையுடன் 2 பாக்கெட் ரைசோபியம் (பயறு) உயிர் உரத்தை ஆறிய அரிசிக்கஞ்சியுடன் கலந்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி 24 மணிநேரத்திற்குள் விதைக்க வேண்டும்.
 • 1 கிலோ விதைக்கு டிரைகோடெர்மாவிரிடி 4 கிராம் என்ற அளவில் கலந்து விதைக்க வேண்டும். 2 அல்லது 3 முறை நிலத்தை நன்கு உழுது பண்படுத்த வேண்டும்.
 • மண் பரிசோதனை பரிந்துரைப்படி உர மிட வேண்டும்.
 • இறவை சாகுபடியாளர்கள் எக்டேருக்கு 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து இட வேண்டும். மானாவாரி விவசாயிகள் எக்டேருக்கு 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து இட வேண்டும்.
 • மணிச்சத்தை ஊட்டமேற்றிய தொழு உரமாக இட வேண்டும்.
 • விதைத்த 30 மற்றும் 45வது நாளில் 2% டிஏபி கரைசல் இட வேண்டும். பூக்கள் தோன்றும் ஒருமுறையும், 15 நாள் கழித்து என்ஏஏ 40 பிபிஎம் கரைசல் தெளிக்க வேண்டும்.
 • இறவை சாகுபடியில் எக்டேருக்கு 500 மில்லி புளுகுளோரலின் களைக்கொல்லியை 625 லிட்டர் நீரில் கலந்து, விதைத்த 3ம் நாள் தெளித்து உடனடியாக நீர் பாய்ச்ச வேண்டும். பின், 25வது நாள் கைக்களை எடுக்க வேண்டும்.
 • மானாவாரி நிலங்களில் 20 மற்றும் 40வது நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.
 • உளுந்துக்கு மொத்தமாக 4 அல்லது 5 முறை நீர் பாய்ச்சினால் போதுமானது.
 • குறிப்பாக பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவங்களில் வறட்சியை தவிர்க்க வேண்டும்.
 • ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை கடைபிடிக்க வேண்டுமென பழநி வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “உளுந்து சாகுபடி டிப்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *