உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய்க்கு தடுப்பு முறையைக் கடைப்பிடிக்காவிட்டால், மிக விரைவாக அனைத்துச் செடிகளிலும் பரவி மகசூல் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
மஞ்சள் தேமல் நோய்க்கான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து மதுரை விநாயகபுரம் நீர்மேலாண்மை பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநர் பே.இந்திராகாந்தி கூறியதாவது:
- உளுந்து பயிரிடும் விவசாயிகள் நோய் எதிர்ப்பு சக்தி அல்லது நோய் தாங்கக் கூடிய ரகங்களான வம்பன் – 4, வம்பன்-5, வம்பன்-6 ஆகிய ரகங்களைத் தேர்வு செய்யலாம்.
- மஞ்சள் தேமல் நச்சுயிரி தாக்கப்பட்ட பயிர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து பிடுங்கிஎடுக்க வேண்டும்.
- வரப்பு ஓர பயிர்களாக ஏழு வரிசையில் சோளத்தைப் பயிரிடலாம்.
- இமிடாகுளோர்பிரிட் 70 டபுள்யூஎஸ் என்ற மருந்தை கிலோவுக்கு 5 மிலி என்ற அளவில் விதை நோóத்தி செய்ய வேண்டும். டைமெத்தோயேட் மருந்தை ஹெக்டேருக்கு 750 மிலி என்ற அளவில் விதைத்த 30 நாள் கழித்து இலைவழித் தெளிப்பு செய்ய வேண்டும்.
- இத்தகைய தடுப்பு முறைகளைக் கடைப்பிடித்தால் மஞ்சள் தேமல் நோயிலிருந்து உளுந்து பயிரைப் பாதுகாக்கலாம் என்றார்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
very very thanks