பயிர் விளைச்சலை அதிகரிக்க உதவும் “அக்ரிடோன் 4.5′ என்ற இயற்கை உரத்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினார்.”பி.எம்.பயோ எனர்ஜி’ நிறுவனம் தயாரித்த “அக்ரிடோன் 4.5′ இயற்கை உரத்தை அறிமுகப்படுத்தி வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியது:
- மண் வளத்தை இயற்கை முறையில் மேம்படுத்த தகுந்த உரத் தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
- மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் காற்றிலுள்ள தழைச் சத்தை உள்வாங்கி மண்ணில் நிலை நிறுத்தி பயிர்களுக்கு அளிக்கின்றன.
- இயற்கையாக மட்கும் பொருள்கள் இல்லாவிட்டால் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறையும்.
- எனவே, அதன் வளம் குன்றாமல் பாதுகாப்பது விவசாயிகளின் கடமையாகும். இதை ஐ.நா. சபை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
- தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “அக்ரிடோன் 4.5′ உரம் அனைத்து வகையான காய்கறிகள், பருவநிலைக்கு ஏற்றதாகும்.
- தோட்டப் பயிர்கள், தானியங்கள், எண்ணெய் வித்துகள், சிறுதானியங்கள், நாற்றங்கால் பண்ணைகள் ஆகியவற்றுக்கு இதைப் பயன்படுத்தலாம் என்றார் அவர்.
- பூமிக்கடியில் உள்ள பழுப்பு நிலக்கரியில் இருந்து எடுக்கப்படும் கழிவுப் பொருளான “அக்ரிடோன் 4.5′ இயற்கையான தண்ணீரில் கரையக் கூடியது. இந்த உரத்துக்கான தொழில்நுட்பத்தை நெய்வேலி பழுப்பு நிறுவனம் (Neyveli Lignite Corporation) உருவாக்கியுள்ளது.
- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் பரிசோதித்து விளைச்சலை அதிகரிக்கவும், தரமான பொருள்களை உற்பத்தி செய்யவும் உதவும் என சான்றிதழ் வழங்கியுள்ளது என “பி.எம்.பயோ எனர்ஜி’ நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு:
B.M. பயோ எனெர்ஜி
R. S. No 12/7, 66, பெருங்களூர் புதுச்சேரி 605 007
email: bmbioenergy@bmpl.net
தொலைபேசி : 04423746780
அலைபேசி : 09841911099
இணையத்தளம் : www.agritone.in
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இயற்கை விவசாயத்தில் வெற்றி பெற்றுவரும் விவசாயிகளின் அனுபவங்களை வெளியிட்டால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் .