நெற்பயிரில் தழைச்சத்தாக அளிக்கும் யூரியா உரத்தை அதிகமாக இட்டால், நோயின் தாக்கம் அதிகரிக்கும் என்றார் வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மைய நோயியல் துறைப் பேராசிரியர் முனைவர் ஆர்.பி. செüந்தர்ராஜன்.
ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல் தொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது:
- நெற்பயிரைத் தாக்கும் முக்கிய பூச்சிகளான இலைப்பேன், தண்டுதுளைப்பான், இலைச்சுருட்டுப்புழு, புகையான், பச்சை தத்துப்பூச்சி மற்றும் கதிர்நாவாய் பூச்சிகளை ஒருங்கிணைந்த முறைகளான விதை நேர்த்தி, விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப் பொறியமைத்து கட்டுப்படுத்தலாம்.
- பூச்சிக்கொல்லிகளை பரிந்துரைக்கப்பட்ட அளவில் பொருளாதார சேத நிலை ஏற்படும் பட்சத்தில் மட்டும் பயன்படுத்த வேண்டும்.
- தழைச்சத்து உரமான யூரியாவை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதுதான் அனேக பூச்சி மற்றும் நோய்களுக்கு காரணமாக உள்ளது.
- எனவே, தழைச்சத்தினை பரிந்துரைக்கப்பட்ட அளவில் மூன்று அல்லது நான்கு தவணைகளாகப் பிரித்து இடுவதன் மூலம், பூச்சி மற்றும் நோய்கள் வருவதைத் தவிர்க்கலாம் என்றார் அவர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்