பயிர்களுக்கு இயற்கை வளர்ச்சி ஊக்கியாக பல்வேறு கரைசல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன், அந்த வகையில் முட்டை அமிலம் தயாரிக்கும் முறை பற்றி இங்கு காண்போம்.
- முட்டை அமிலம் தயாரிக்க 5 முட்டை, 250 கிராம் வெல்லம் மற்றும் 10 முதல் 15 வரையிலான எலுமிச்சை பழங்களின் சாறு ஆகியவை தேவைப்படும்.
தயாரிக்கும் முறை :
- எடுத்துக்கொண்ட முட்டையை அப்படியே ஒரு குவளை அல்லது ஜாடியில் போட்டு, எலுமிச்சை சாற்றை அந்த முட்டை மூழ்கும் வரை ஊற்றி 10 நாட்கள் மூடி வைக்க வேண்டும். 10 நாட்கள் கழித்து, அந்த முட்டைகளை உடைத்து, எலுமிச்சை சாற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.
- பிறகு அதனுடன் வெல்லத்தை சேர்த்து, மேலும் 10 நாட்கள் மூடி வைக்க வேண்டும். 10 நாட்கள் கழித்து, பயிர்களுக்கு அளிக்கலாம்.
- 2 மில்லி அளவு கரைசலை, ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து பயிர்களுக்கு அளிக்கலாம்.
- இதனால் பயிர்களுக்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றன, மேலும் பயிர்களின் வளர்ச்சியையும் இந்த கரைசல் அதிகப்படுத்துகிறது.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்