உரங்களின் விலை மூன்று ஆண்டுகளில் 300% உயர்வு!

விவசாய ஈடு பொருட்களில் முக்கியமானது ரசாயன உரங்கள்
இவற்றின் விலைகள் தாறு மாறாக உயர்ந்து வருகின்றன.
இதனால் விவசாயத்தின் லாபம் குறைந்து வருகிறது.

  • DAP  உரம் 50  கிலோ விலை 2009 ஆண்டில் ரூ 486  ஆக இருந்தது. இப்போது அதன் விலை ரூ 1050  அடுத்த மாதம் அதன் விலை 1245  தொடும் என படுகிறது.
  • NP  காம்ப்ளெக்ஸ் உரம் 20 : 20  விலை ரூ 360  இருந்தது. இப்போது ரூ 855  அடுத்த மாதம் இதன் விலை ரூ  920   ஆக போகிறது.
  • பொட்டாஷ் உரம் 2009  ஆண்டில் ரூ 261  விற்க பட்டது. இப்போது அதன் விலை ரூ 754
  • சூப்பர் போஸ்பேட் 2010  ஆண்டில் ரூ 170  விற்க பட்டது இப்போது ரூ 385
  • கடந்த மூன்று ஆண்டுகளில் ரசாயன உரங்களின் விலை 300  சதவீதம் உயர்ந்து உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கெல்லாம் காரணம் நம்முடைய மதிய UPA  அரசுதான். இந்த அரசு 2011 ஆண்டு முதல் உர கம்பனிகள் தங்களின் விலையை நிர்ணயம் செய்ய அனுமதி கொடுத்து இப்படி ஒரு பிரச்னையை  கிளப்பி உள்ளது

செயற்கை உரங்களின் விலை உயர்வினால் விவசாயிகள் இயற்கை உரங்கள் பக்கம் திரும்புவார்களா?

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “உரங்களின் விலை மூன்று ஆண்டுகளில் 300% உயர்வு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *