நெல் நடவுக்காக நுண்ணுாட்ட சத்துக்களை நிலத்திற்கு வழங்க, விவசாயிகள் சணல்பூ எனும் கொளுஞ்சி செடிகளை அதிகளவில் வளர்த்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் கோடை உழவில் நெல் பயிரிட தங்கள் வயல்களை செப்பனிட்டு வருகின்றனர். நெல் நடவுக்கு முன்னதாக நிலத்தில் நுாண்ணுாட்ட சத்துக்களை ஏற்றுவதற்காக, விவசாயிகள் சணல்பூ செடிகளை அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.
இந்த செடிகளில் பூக்கள் வருவதற்கு முன் பறித்து, நெல் நடவு செய்ய உள்ள நிலத்தில் போட்டு உரமாக்கி உழவு பணிகளை மேற்கொள்வர்.
உழவு மற்றும் தொழு அடிக்கும் போதும் வயலில் தேங்கிய தண்ணீர் மூலம் இச்செடிகள் அழுகி நிலத்திற்குள் மக்கி இயற்கை உரமாகிறது.
இச்செடிகளில் புரோட்டீன் சத்து அதிகம் இருப்பதால், நெல் விளைச்சல் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும்.
இதற்காகவே சிவகங்கை மாவட்ட விவசாயிகள் நேரடி நீர் பாசனம் மூலம் நெல் விளைச்சலில் ஈடுபடும் முன் கொளுஞ்சி செடிகளை வயல்களில் போட்டு உரமாக மாற்றுகின்றனர்.
விவசாய இணை இயக்குனர் இளங்கோ கூறுகையில், ”கிணறு மற்றும் ஆழ்துளை நீர்பாசனம் மூலம் நெல் நடவு செய்யும் விவசாயிகள், தங்கள் நிலங்களில் கூடுதல் நுண்ணுாட்ட சத்துக்களை ஏற்றுவதற்காக சணல்பூ செடிகளை போட்டு உரமாக்குகின்றனர்,” என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்