உர செலவை குறைக்க அசோலா

கோபி அருகே நம்பியூரில் உர செலவை குறைக்க அசோலாவை உற்பத்தி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.நம்பியூர் வட்டார வேளாண்மை திட்ட பணிகளையும், அசோலா உயிர் உர உற்பத்தியையும் ஆய்வு செய்த ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

  • அசோலா என்பது பெரணி வகையை சார்ந்த நீர்த்தாவரமாகும்.
  • இந்த தாவரத்தில் உள்ள அனபினா என்ற நீலப்பச்சைப் பாசி நுண்ணுயிர் காற்றில் உள்ள தழைச்சத்தை நிலைப்படுத்தி கொடுக்கிறது. இதனால் அசோலா பசுமையாக வளர்கிறது.
  • இதை நெல் வயலுக்கு போட்டு அப்படியே பசுந்தழை போல சேற்றில் மிதித்து விடலாம். இதனால் ஏக்கருக்கு 30 கிலோ தழைச்சத்து பயிருக்கு கிடைக்கிறது.
  • ஒரு ஏக்கர் நெல் வயலில் அசோலா வளரும் போது, 6 டன்கள் பசுந்தழை உரம் கிடைக்கிறது.
  • மேலும் இதில் 5 சதவீதம் தழைத்சத்து, 0.5 சதவீதம் மணிச்சத்து, 4 சதவீதம் சாம்பல் சத்து ஆகியவை உள்ளன.
  • இந்த அசோலாவை கறவை மாடுகளும், கோழிகளும் விரும்பி உண்பதால், அடர் தீவனத்துக்கு ஆகும் செலவும் குறைவதுடன், பாலுக்கும் நல்ல விலை கிடைக்கிறது என்றார்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

One thought on “உர செலவை குறைக்க அசோலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *