ஏலச் செடிகளுக்கு இயற்கை உரமாக பயன்படும் குப்பைக்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளது.திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக நிதிவழங்குகிறது. வீடுகளில் இருந்து வெளி வரும் மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வாங்கி மறுழற்சி செய்து உரமாக்க வேண்டும் என்பது நோக்கமாகும்.
ஆனால் பல உள்ளாட்சிகள் இதனை நிறைவேற்றாமல் ஏதோ ஒரு காரணங்களை கூறி தட்டி கழிக்கின்றனர்.
போடி அருகே உள்ள பி.மீனாட்சிபுரம் பேரூராட்சியில் இயற்கை உரம் தயாரிக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துகின்றனர்.
பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் 8 பேர் வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து வாங்குகின்றனர். மக்கும் குப்பைகளை தனியாக சேகரித்து ஊருக்கு வெளியே உள்ள “நிலவள மீட்பு பூங்கா’ விற்கு கொண்டு வருகின்ற னர்.
தினமும் 1300 கிலோ மக்கும் குப்பை தொட்டிகளில் பரப்பி, மண்புழு உதவியுடன் 90 நாட்களில் இயற்கை உரம் தயார் செய்கின்றனர்.
கடந்த எட்டு மாதங்களில் 30 டன் உரம் தயாரித்து, கிலோ ரூ.4 வீதம் விற்பனை செய்துள்ளனர். இது ஏல செடிகளுக்கு நல்ல இயற்கை உரம் என்பதால் விவசாயிகளிடம் வரவேற்பு ஏற்பட்டுள் ளது.
இதே போன்ற மற்ற உள்ளாட்சி அமைப்புகளும் இயற்கை உரம் தயார் செய்தால் குப்பைகள் தேக்கத்தை குறைக்கவும், வேளாண்மைக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்