சொட்டுநீர் பாசன விவசாயிகளுக்கு வெள்ளை பொட்டாஷ் உரம் சப்ளை

  • தேனி மாவட்டத்தில், சொட்டுநீர் பாசனத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நீரில் கரையும் தன்மையுள்ள வெள்ளை பொட்டாஷ் உரம் சப்ளை செய்யப்படுகிறது.
  • சிவப்பு நிறத்தில் உள்ள சாதாரண ரக பொட்டாஷ் உரங்கள் நீரில் உடனே கரையாது.
  • இந்த உரத்தை பயன்படுத்தும் சொட்டுநீர் பாசன விவசாயிகள், முதலில் உரத்தை வேறு பாத்திரங்களில் கரைத்து அதன் பின் சொட்டுநீர் பாசன குழாய்களில் செலுத்தி பயன்படுத்த வேண்டும்.இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு வந்தது.
  • இதனை தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்களுக்கு நீரில் எளிதில் கரையும் தன்மை உள்ள வெள்ளை பொட்டாஷ் உரங்களை சப்ளை செய்ய வேண்டும், என கலெக்டர் பழனிசாமி அரசுக்கு பரிந்துரை செய்தார்.
  • இதனை ஏற்றுக் கொண்ட அரசு நீரில் கரையும் தன்மை கொண்ட வெள்ளை பொட்டாஷ் உரங்களை வழங்கி உள்ளது.
  • அடுத்தடுத்து தொடர்ந்து வெள்ளை பொட்டாஷ் உரத்தை தேவைக்கு ஏற்ப சப்ளை செய்யவும் ஒப்புக்கொண்டுள்ளது.
  • இந்த உரங்கள் தொடக்க விவசாய கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. காமயகவுண்டன்பட்டி, எரசக்கநாயக்கனூர், வடபுதுப்பட்டி, கூடலூர், நாகலாபுரம், சீப்பாலக்கோட்டை, லட்சுமிபுரம், ராயப்பன்பட்டி, உப்புக்கோட்டை, சின்னமனூர், உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, கம்பம் உட்பட பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் மூலம் இந்த உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
  • தொடர்ந்து இந்த உரங்கள் வழங்கப்படும், என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *