தென்னை ஓலை உரம்

  • வீணாகும் தென்னை ஓலைகளை இயந்திர உதவியுடன் இயற்கை உரமாக மாற்றும் தொழில்நுட்பம், தற்பொழுது விவசாயிகள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.
  • தென்னை சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தென்னை மரங்களில் இருந்து விழும் தென்னை ஓலைகள் வீணாக, விவசாய நிலங்களில் வைக்கப்பட்டிருக்கும் பல விவசாயிகள், அவற்றை எரிபொருள் பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் அனைவருக்கும் இது ஒரு சிறந்த வழியாக இருக்கும்.
  • தென்னை ஓலைகளை மண்ணில் மட்கச்செய்து, அவற்றை இயற்கை உரமாக மாற்றலாம்.
  • விவசாய நிலத்தில், சிறிய குழி தோண்டி, கோகனட் கட்டர் என்ற உபகரணம் மூலம் தென்னை ஓலைகள் செலுத்தி, அந்த தென்னை ஓலை பொடியாக மாற்றப்படுகிறது. அதனை குழியில் போட வேண்டும்.
  • தென்னை ஓலை பொடி, அதன் மீது சாண உரம் என நிரப்பி குழியை மூட வேண்டும்.
  • ஆறு மாதம் கழித்து, தென்னை ஓலை பொடி, இயற்கை உரமாக தென்னை மரங்களுக்கே பயன்படுத்தலாம்.
  • தென்னை ஓலையை இயற்கை உரமாக மாற்றுவதன் மூலம், தென்னை எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு அதனால் ஏற்படும் புகை மாசு தவிர்க்கப்படுகிறது.
  • தென்னை ஓலையை இயற்கை உரமாக பயன்படுத்தப்படுவதால், விவசாயிகளுக்கான உர செலவு சேமிக்கப்படுகிறது;.
  • தென்னை மரத்தை சுற்றி களைச்செடி வளர்வது தவிர்க்கப்படுகிறது. ரசாயன உர பயன்பாடும் குறைகிறது.

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “தென்னை ஓலை உரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *