பஞ்சாபில் ரசாயன பூச்சி கொல்லி பயனால் வந்த வினைகள்

பஞ்சாபில் அளவுக்கு அதிகமாக பூச்சி மருந்துகள் பயன் படுத்தி நிலத்தடி நீர் மாசு பட்டு விட்டது. பஞ்சாபில் அதிகமாக கான்செர் (புற்று நோய்) அதிகரித்து உள்ளது. புற்று நோய்க்கும் ரசாயன பூச்சி கொல்லி உள்ள உறவு நன்கு புரிந்து கொள்ளப்பட்ட ஒன்று
இப்போது பஞ்சாபில் உள்ள ஜலந்தர் லூதியானா அம்ரித்சர் போன்ற மாவட்டங்களில் மேற்கொண்ட பட்ட ஆய்வில் குழந்தைகளையும் தாய்மார்களையும் தாக்கும் புதிய தகவல்கள் வெளி வந்து உள்ளன:

  • நிலத்தடி நீர் விஷம் இப்போது பச்சிளம் குழந்தைகளையும், கரு உற்றுள்ள தாய்மார்களையும் தாக்குகிறது. 1000 கர்ப்பிணிகளில்  20 பேருக்கு கரு களைப்பு ஆகிறது (20 abortions in 1000 live births). இது, மிகவும் அதிகம்
  • பிறந்த குழந்தைகளில் அதிக சதவீதம் இறந்து பிறக்கின்றன (still born)
  • அப்படியே பிறந்து வளரும் குழந்தைகளுக்கு பேச்சு திறன் வருவதற்கு அதிக காலம் ஆகிறது. மன நிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளும் அதிகம்

பசுமை புரட்சி என்ற பேரில், பஞ்சாபில் அளவுக்கு அதிகமாக ரசாயனங்களை நீண்ட நாட்கள் பயன் படுத்தியதின் விளைவுகள் இவை!

நன்றி: டைம்ஸ் ஒப் இந்தியா


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பஞ்சாபில் ரசாயன பூச்சி கொல்லி பயனால் வந்த வினைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *