திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு மெட்டூர் கேட் அருகே விவசாய தோட்டம் உள்ளது. இங்கு பயிர்களுக்கு இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். ‘ஆர்கானிக் பவர் பிளஸ்’ என்ற நுண்ணுாட்ட ஊக்கியை கண்டுபிடித்து பயிர் சாகுபடியில் பயன்படுத்துகின்றனர்.
இது பயிர்களை தாக்கும் பூச்சிகளை விரட்டும் மருந்தாகவும், ‘சீசன்’ இல்லாத நேரத்திலும் மகசூல் பெறும் வகையில் பயிர்களுக்கான ‘ஊக்கி’யாகவும் பயன்படுகிறது.
வேர் அழுகல், தண்டு அழுகல் நோய்களை கட்டுப்படுத்துகிறது. பயிர்களை பாதிக்கும் பூஞ்சான நோய்களையும் கட்டுப்படுத்துகிறது.
நாவல் பழத்தைப் பொறுத்தவரை, பிப்ரவரியில் துவங்கி ஜூலையில் சீசன் முடிந்து விடும். மல்லிகைப்பூ பனிக் காலத்தில் பூக்காது. குறிப்பாக டிசம்பர், பிப்ரவரி மாதங்களில் மல்லிகைப்பூ விலை ஆயிரம் ரூபாயை தாண்டும். சீசன் அல்லாத நேரங்களிலும் இந்த நுண்ணூட்ட ஊக்கியை பயன்படுத்தி, மல்லிகையை விளைவிக்க முடியும் என நிரூபித்துள்ளனர்.
நுண்ணூட்ட ஊக்கி
இந்த ஊக்கி, சாணம், கோமியம், தயிர், நெய், பால் ஆகிய பஞ்ச கவ்யத்துடன் சப்போட்டா, நெல்லி, அன்னாசி, எலுமிச்சம், சாத்துக்குடி ஆரஞ்சு பழத்தின் தோல், மீன் கழிவுகள், நிலக்கரி படிமம் ஆகியவை கலந்து தயாரிக்கப்படுகிறது.
இறுதியில் அசோஸ்பைரில்லம், ரைஸ்சோபியம், சூடோமோனாஸ் ஆகியவையும் கலக்கப்படுகிறது. இது முழுக்க, முழுக்க இயற்கை நுண்ணூட்ட ஊக்கியாக உள்ளது.
மல்லிகைப்பூ, ரோஜா, நாவல், திராட்சை உட்பட பல பயிர்களுக்கும் 10 லிட்டர் தண்ணீரில் 50 மி.லி., கலந்து 20 நாட்களுக்கு ஒரு முறை என ஏக்கருக்கு ஒரு லிட்டர் தெளிக்க வேண்டும். இதன் மூலம் சீசன் இல்லாத நேரங்களிலும் பூக்கள், காய்கள் காய்க்கும்.
இதனை தயாரித்து பயன்படுத்தும் விவசாயி சி.லியோ கூறியதாவது:
![Courtesy: Dinamalar](http://gttaagri.relier.in/wp-content/uploads/2016/11/E_1479872504.jpeg)
பொறியியல் படித்துள்ளேன். இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. இதனால் இந்த நுண்ணூட்ட ஊக்கியை கண்டுபிடிக்க முடிந்தது.
இது முழுவதும் இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இந்த ஊக்கி குறித்து விவசாயிகளுக்கு இலவச பயிற்சியும் அளிக்க உள்ளேன்.
ஒரு லிட்டர் ரூ.250க்கு விற்பனை செய்கிறேன். இதனை பயன்படுத்துவதால் பிஞ்சுகள் அதிகரிக்கும்.
பூக்கள் அடர்த்தியாக, காய்கள் பளபளப்பாக இருக்கும், என்றார். தொடர்புக்கு 09865925193 ல் தொடர்பு கொள்ளலாம்.
– எஸ்.அரியநாயகம், திண்டுக்கல்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Thanks for informing
கொரியன் சப்ளை உண்டா?