- பொட்டாசியம் எனப்படும் சாம்பல்சத்து, தழை, மணிச்சத்துக்களுக்கு நிகரான நன்மைகளாய் பயிர்களுக்கு அளிக்கிறது.
- பொட்டாசியம் செடிகளில் பல வகைகளில் செயல்படுகிறது. வேர் உறிஞ்சி சேர்க்கும் நீர், தாது உப்புக்கள் இலை பாகங்களில் சென்று சேருவதற்கும் மேலும் இலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் செடிகளின் அனைத்து பாகங்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கும் பெரும்பங்கு வகிக்கிறது.
- பொட்டாசியத்தை கரைக்கவல்ல பாக்டீரியாக்கள் “சிலிகோ பாக்டீரியா’ எனப்படுகின்றன.
- அதன் ஆற்றலானது களிமண்ணோடு இணைந்து காணப்படுகிறது. சிலிக்கா, அலுமினியம், பொட்டாசியம் ஆகிய அயன்களின் கூட்டுக் கலவைகளிலிருந்து சிலிக்காவை கரைத்து பொட்டாசியத்தை களிமண்ணிலிருந்து விடுவிக்கிறது.
- அவ்வாறு விடுவிக்கப்படும் பொட்டாசியம் நீரில் கரைந்து செடிகளினால் எளிதில் உட்கொள்ளும் நிலையில் மாற்றப்படுகிறது.
- பரிமாற்ற நிலையிலுள்ள பொட்டாசியம், இவ்வகை பாக்டீரியாக்களினால் அதிக அளவில் குறுகிய காலத்தில் கரைக்க வழிசெய்கின்றது.
- பரிமாற்றம் இல்லாத நிலையில் கூறுகளாக விளங்கும் பொட்டாசியம் சில ஆண்டுகளில் இவ்வகை பாக்டீரியாக்களின் ஆக்கிரமிப்பு பரிமாற்ற விலைக்கு மாற்றப்படுகிறது.
- இச்செயல்கள் பாக்டீரியாவிலிருந்து வெளியாகும் அங்கக அமிலங்கள் பாலிசாக்கரைட் போன்றவையினாலும் நேர்மின் அயன், எதிர்மின் அயனியில் பரிமாற்றங்களிலும் நிகழ்கிறது.
- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலும் நுண்ணுயிர் துறையில் இரண்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டன.
- இவ்வாய்வின் முடிவாக இரண்டு சிறந்த பொட்டாஷ் பாக்டீரியாக்கள் (கே.ஆர்.பி.1 கே.ஆர்.பி.9) கண்டறிந்து, அதன் திறன் ஆராய்ந்து நெற்பயிரில் பரிசோதிக்கப்பட்டது.
- கே.ஆர்.பி. 1 பேசில்லஸ் பிளக்சிஸ் எனவும், கே.ஆர்.பி.9 பேசில்லஸ் மியூசிலாஜினோசஸ் என்ற பிரிவுகளில் சேர்ந்த இராசிகள் எனவும் கண்டறியப்பட்டது.
- இந்த இராசிகளை மண்ணில் இட்டும், அதன் பொட்டாசியம் விடுவிக்கும் தன்மை ஆராயப்பட்டது.மேலும் கே.ஆர்.பி.9 என்றும் இராசியை நெற்பயிரில் விதைநேர்த்தி, நாற்றங்கால் வேர் நனைத்தும் மண்ணில் இட்டும் பரிசோதிக்கப்பட்டது.
- கே.ஆர். பி.9, 75 சதம் பொட்டாசியம் உரம் இட்ட நெற்பயிரில் ஒரு எக்டருக்கு கே.ஆர்.பி.9 இடாத செடிகளைக் காட்டிலும் 33.6 சதம் நெல் விளைச்சலும், 28.87 சதம் வைக்கோல் விளைச்சலும் அதிகரித்தது என இந்த ஆராய்ச்சியின் முடிவில் கண்டறியப்பட்டது.
- மேலும் நெற்பயிரில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துக்கள் அதிகரித்துக் காணப்பட்டது.
- நெற்பயிர், பருத்தி, நிலக்கடலை, முட்டைகோஸ், கத்தரிக்காய், வெள்ளரி, சோளம், கோதுமை, வெங்காயம், கரும்பு ஆகிய பயிர்களில் பல இடங்களில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் பேசில்லஸ் மியுசில்லாஜினோசஸ் ராசியைக் கொண்டு பரிசோதிக்கப்பட்டதில் அதிக விளைச்சல், பயிர்களின் தரம் அதிகரித்துக் காணப்பட்டது.
- இந்த ராசியானது சாம்பல் சத்து மட்டுமல்லாது மணிச்சத்து, சிலிக்கா போன்ற சத்துக்களையும் கரைக்கக்கூடியதாகும். மேலும் இவை அசோஸ்பைரில்லம் அசட்டோபேக்டர், பாஸ்போ பாக்டீரியா போன்றவற்றுடன் கூட்டாக இடும்போது அதன் திறன் மேலும் சிறந்து விளங்குகிறது.
- இத்தகைய நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை பயன்படுத்துவதால் நாம் பொட்டாஷ் உரத்தேவையை 25 முதல் 50 சதம் வரை குறைத்து இடலாம்.
- மேலும் இவ்வகை நுண்ணுயிர்கள் இடுவதினால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் இயற்கையாக சத்துக்களின் சுழற்சி மற்றும் மண்ணின் விளையும் திறன் மேம்படும்.
தகவல்: முனைவர் இரா.பிருந்தாவதி, முனைவர் க.கோபாலசாமி, நுண்ணுயிரியல் துறை த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் -641 602. போன்: 0422661 1294.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Can we used pottash bacteria for tapioca in trips