மண்ணை வளப்படுத்தினால் அனைத்து பயிர்களும் நன்றாக வேர்விட்டு வளரும். நல்ல மகசு லும் கிடைக்கும். அதற்கு மண்ணை சத்தூட்டம் உள்ளதாக மாற்ற வேண்டும். மண்ணை அதிக சத்துள்ளதாக மாற்ற நுண்ணுயிர் கரைசல் தயாரிக்கும் முறை பற்றி காணலாம்.
நுண்ணுயிர் கரைசல் :
- காற்றில்லாத சு ழலில் வளரும் நுண்ணுயிர்களை ஆங்கிலத்தில் அனரோபிக் பாக்டீரியா என குறிப்பிடுவர்.
- இது போன்ற ஒரு காற்றில்லாத சு ழலை செயற்கையாக உருவாக்கி அதில் இந்த பாக்டீரியா என்ற நுண்ணுயிர்களை வளரச் செய்து மண்ணுக்கு கொடுக்கலாம்.
- இதற்கு தொல்லுயிர் கரைசல் முறையில் நுண்ணுயிர்களை உருவாக்க முடியும்.
தயாரிப்பு முறை :
- 50 லிட்டர் கொள்ளவு கொண்ட பிளாஸ்டிக் டிரம்மை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அதில் புதிய மாட்டுச்சாணம் 5 கிலோ, நாட்டுச் சர்க்கரை முக்கால் கிலோ, கடுக்காய் தூள் 25 கிராம், அதிமதுரம் பொடி 25 கிராம் என்ற அளவில் போட வேண்டும்.
- பின்னர் 45 லிட்டர் அளவுக்கு தண்ணீர் எடுத்து இந்த பிளாஸ்டிக் டிரம்மில் நிரப்பிக் கொள்ள வேண்டும்.
- பின் அந்த டிரம்மை இறுக காற்றுப்புகாமல் மூடி விட வேண்டும்.
- 10 நாட்கள் வரை இதனை இவ்வாறு இறுக மூடி வைக்கும் போது இதில் மீத்தேன் வாயு உருவாகி இருக்கும்.
- 10 நாளில் மூடியை லேசாக திறந்து விட்டால் வாயு வெளியேறும். இந்த நிலையில் கேனில் உள்ள கலவையில் காற்றில்லாத சு ழ்நிலை இருந்தால் நுண்ணுயிர்கள் பல மடங்கு பெருகி இருக்கும். இதுவே, சத்தூட்டமுள்ள உரக்கலவை ஆகும்.
பயன்படுத்தும் முறை :
- 1 முதல் 2 லிட்டர் கரைசல் எடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களுக்குத் தௌpக்கலாம்.
- ஒரு ஏக்கருக்கு 10 முதல் 20 லிட்டர் கரைசல் போதுமானது.
பயன்கள் :
இந்த கரைசலை தௌpப்பதால் பயிரில் இலைபரப்பு அதிகரிக்கும்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
கெண்டை மீன் வளர்ப்பு பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன்.