மண்புழுக்குளியல் நீர் Vermiwash

மண்வளம் பெருகிட மண்புழுக்கள் பெரிதும் உதவுகின்றன. இவை கிடைத்த பயிர் கழிவுகளை உண்டு நன்மை செய்யும் உரமாக்குவது நாம் அறிந்ததே.

பயிர் வளர ஊக்கியாக செயல்பட மண்புழுக்களின் உடலின் வெளிப்புறம் ஈரமாக வைத்திருக்க அவை வியர்வை போன்ற திரவத்தை மெதுவாக வெளியிடுகின்றன. இந்த திரவத்தை சேகரித்து பயன்படுத்தும் உத்தி தான் மண்புழுக்குளியல் நீர் தயாரித்தல் ஆகும்.

அதற்கு ஆங்கிலத்தில் வெர்மிவாஷ் (Vermiwash) என்ற பெயர் உள்ளது.

மண்புழுவை ஒரு தொட்டியில் அல்லது பானையில் வளர்த்து அதன் அடியில் சிறு துளைகள் மூன்று அல்லது நான்கு இட வேண்டும். இதன் மூலம் நீர் வடியும் வண்ணம் செய்ய முடியும்.
மண்புழு உள்ள பானைக்கு மேல்புற நீர் நிரம்பிய கலயம் அமைத்து அதில் ஒரு லிட்டர் நீரை ஊற்ற வேண்டும். அதற்கு முக்காலி போல மூன்று கம்புகளை கட்டி தொங்க வைத்து சிறு துளை ஏற்படுத்தி சொட்டு சொட்டாக வரவிட வேண்டும்.

ஒரு இரவு முழுவதும் இவ்வாறு சொட்டுச் சொட்டாக விழும் நீரானது மண்புழுவின் உடலையும் மண்புழு ஏற்படுத்திய சுரங்கங்களையும் கழுவியப் பானையின் அடிப்புறமாக துளைகள் வழியே வெளியேறும். இப்படி வெளியேறும் நீரே மண்புழுக்குளியல் நீர் எனப்படும் டீத்தண்ணீர் மாதிரி உள்ள நீராகும் பானைக்கு அடியில் வேறு பாத்திரத்தை வைத்து சேகரித்து பயன்படுத்தலாம்.

Pic17அதாவது ஒரு லிட்டர் குளியல் நீரை 9 லிட்டர் நீரில் கலந்து செடிகளுக்கு அடியில் ஊற்றியும் இலை வழியாக தெளித்தோ அல்லது சொட்டுநீர் பாசன முறையில் நீரில் கரைத்து அனுப்பியும் நல்ல லாபம் பெறலாம்.

தயாரிக்க முடியாதவர்கள் தனியார் வசம் வாங்கியும் பயன்படுத்துவது நல்லது.

காய்கறிகள், பழங்கள், தென்னை, மலர்கள், மலைத்தோட்டப்பயிர்கள் எல்லாம் நல்ல மகசூல் தர இது பிரதி மாதம் தெளிப்பது நல்லது.

மேலும் விபரம் பெற 09842007125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
– டாக்டர் பா.இளங்கோவன்,
தோட்டக்கலை உதவி இயக்குநர்,
உடுமலை, திருப்பூர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *