மண் புழு உயிர் உரத் தொழில்நுட்பம்

மண்புழு உயிர் உரத் தொழில்நுட்ப முறைகள் குறித்து, கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர்கள் வி. சஞ்சீவ்குமார், சா. இளமதி, பேராசிரியர் மற்றும் தலைவர் து. ஜவஹர் ஆகியோர் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

அங்ககக் கழிவுகளை மண்புழுக்களால் மக்கச்செய்து உரமாகப் பயன்படுத்துவதே மண்புழு உரத் தொழில்நுட்பம். மண்புழுக்கள் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதுடன், நோய்க் கிருமிகளை அழிக்கின்றன.

இத் தொழில்நுட்பமானது, அங்ககக் கழிவுகளை மண்புழுக்களைக் கொண்டு மதிப்பூட்டுதல், கழிவுகளை அந்த இடத்திலேயே மேம்படச் செய்தல் மற்றும் கழிவுகளில் உள்ள வேதியியல், உயிரியல் மாசுக்களை அப்புறப்படுத்துதல்.

மண்புழுக்கள் மண்ணின் மேற்பரப்பில் இருக்கும் அங்ககக் கழிவுகள், கால்நடைக் கழிவுகளிலும் மற்றும் மண்ணின் கீழ்ப்பரப்பிலும் வளரும் தன்மை உடையது. மண்ணின் மேற்பரப்பில், அங்ககக் கழிவுகள், கால்நடைக் கழிவுகளில் வளரும் மண்புழுக்களுக்கு, எப்பிஜிக் என்று பெயர்.
இந்த மண்புழுக்கள் நிறமானதாகவும் எல்லா தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் வளரும் தன்மை உடையவை. இதற்கு உதாரணம், மண்ணுக்கு சற்று கீழ் வளரக் கூடிய மண்புழுக்களை, என்டோஜியிக் என அழைப்பார்கள். இவை மண்ணிலிருந்து 30 செமீ ஆழத்தில் வளரும். பொதுவாக இவை மண், அங்ககப் பொருள்களை ஒன்றாகச் சேர்த்து உட்கொள்ளும். இவை மண்ணில் துளையிட்டுச் செல்லும். இதனால் மேல் மண்ணும் கீழ் மண்ணும் ஒன்றாகக் கலந்துவிடும். மண்புழுக்களால் ஏற்படும் துளைகளின் வழியே காற்றும் நீரும் வேர்மண்டலத்தை அடையும்.
மண்ணின் கீழ்பாகத்தில் வசிக்கும் மண்புழுக்கள் “அனிசிக்’ எனப்படும். நீண்ட ஆழத்துக்கு (3 மீட்டர்) செல்லும் இவை, மண்ணில் உள்ள அங்ககப் பொருள்களை மண்ணின் அடிபாகம்வரை எடுத்துச் செல்லும். மண்ணின் மேற்பரப்பில் வளரும் மண்புழுக்களான யூட்ரில்லஸ், எய்சீனியா, பிரியானிக்ஸ் ஆகியவை பிரபலமானவை. இவற்றில் ஆப்ரிக்கன் மண்புழு எனப்படும் “யூட்டிரில்லஸ் யூஜினி’யே அதிக எண்ணிக்கையில் வளர்ந்து, அதிக அளவு கழிவுகளை மக்கச் செய்யும்.
மண்புழு உரம் உற்பத்தி முறை
உகந்த மண்புழுவை தேர்ந்தெடுத்தல்:

மண்புழு உர உற்பத்திக்கு நிலப்பரப்பின் மேல் வாழும் மண்புழுக்களே பயன்படுகின்றன. ஆப்ரிகன் மண்புழு, சிவப்பு புழு, மக்கும் புழு ஆகியவை உர உற்பத்திக்கு சிறந்தவை. ஆப்ரிக்கன் புழு மிகவும் சிறந்தது. காரணம், குறைந்த கால இடைவெளியில் அதிகளவு உரம், புழுக்களை உற்பத்தி செய்யும்.
உற்பத்திக்கான இடம்:

மண்புழு உர உற்பத்திக்கு நிழல், அதிகளவு ஈரப்பதம், குளிர்ச்சியான பகுதி வேண்டும். வெயில், மழையிலிருந்து பாதுகாக்க, தென்னங்கீற்றுக் கூரை ஏற்றது.
கட்டமைப்புகள்:

ஒரு சிமென்ட் தொட்டி கட்ட 2 அடி நீளம், 3 அடி அகலம் இருக்க வேண்டும். அந்த அறையின் அளவைப் பொருத்து நீளமானது எந்த அளவு வேண்டுமானாலும் இருக்கலாம். இம்முறையில் சரியான அளவில் ஈரப்பதத்தைப் பராமரிக்க முடியும். இதனால் தேவையற்ற நீர் வெளியேறாது.
உற்பத்திப் படுக்கை:

நெல் உமி அல்லது தென்னை நார்க்கழிவு அல்லது கரும்புத் தோகைகளை மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்பின் அடிப்பாகத்தில் 3 செமீ உயரத்துக்கு பரப்ப வேண்டும். ஆற்று மணலை இப் படுக்கையின் மேல் 3 செ.மீ. உயரத்துக்கு தூவ வேண்டும். பிறகு 3 செமீ உயரத்துக்கு தோட்டக்கால் மண் பரப்ப வேண்டும்.
கழிவுகளைப் போடும் முறை:

பாதி மக்கிய கழிவுகளை 30 சதவீதம் கால்நடைக் கழிவுகளுடன் கலக்க வேண்டும். ஈரப்பதம் 60 சதவீதம் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மண்புழுவை சமமாக பரப்ப வேண்டும். ஒரு மீட்டர் நீளம் ஷ் 1 மீட்டர் அகலம் ஷ் 0.5 மீட்டர் உயரத்துக்கு 2 கிலோ மண்புழு (2,000 மண்புழு) தேவை.
தண்ணீர் தெளிப்பு:

தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும். 60 சதம் ஈரப்பதம் அவசியம்.
ஊட்டமேற்றுதல்:

அசிட்டோபேக்டர், அúஸாஸ்பைரில்லம், பாஸ்போபேக்டிரியா, சூடோமோனாஸ் போன்ற உயிர் உரங்கள் மூலம் மண்புழு உரத்தை ஊட்டமேற்றலாம். ஒரு டன் கழிவுக்கு ஒரு கிலோ அசோபாஸ் (அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பேக்டீரியா) என்ற அளவில் 20 நாள்களுக்குப் பின் மண்புழுப் படுக்கையில் சேர்க்கலாம்.
அறுவடை:

தொட்டி முறையில், மண்புழு உரப் படுக்கையின் மேல் உள்ள மண்புழுக் கழிவை மட்டும் அறுவடை செய்ய வேண்டும். வாரத்துக்கு ஒருமுறை அறுவடை செய்ய வேண்டும்.
 உர சேமிப்பு:

அறுவடை செய்யப்பட்ட உரத்தை இருட்டறையில் 40 சதவீத ஈரப்பதத்தில், சூரியஒளி படாதவாறு வைக்க வேண்டும். இதனால் நுண்ணுயிர் அழிவைத் தடுக்கலாம்.
உர பயன்பாடு: ஒரு ஹெக்டர் நிலத்துக்கு 5 டன் மண்புழு உரம் பரிந்துரைக்கப்படுகிறது. தொட்டில்களில் போடப்படும் மண் கலவையில் மண்புழு உரம் 40 சதவீதம் கலக்கப்பட்டு பின்பு தொட்டில்களில் இடப்பட்டு நாற்றுகள் நடப்படுகின்றன. தென்னை, வாழை மரங்களுக்கு ஒரு மாதத்துக்கு 5 கிலோ இட வேண்டும்.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “மண் புழு உயிர் உரத் தொழில்நுட்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *