யூரியாவைத் தவிர்த்து பிற உரங்களுக்கு வழங்கி வந்த மானியங்களை மத்திய அரசு ரத்து செய்து விட்டதால், யூரியா மட்டுமே விலை குறைவாக (50 கிலோ மூட்டை 271 ரூபாய்) கிடைப்பதால் விவசாயிகள் யூரியாவை பயன்படுத்தவே விரும்புவதால் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. யூரியாவை, தேவையான அளவு பயன்படுத்த வேளாண் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யூரியா அதிகரித்தால் பூச்சி தாக்கும் :
- பயிருக்கு தழைச்சத்து அதிகரிக்கவே யூரியா பயன்படுத்தப்படுகிறது. ஏக்கருக்கு 22 கிலோ யூரியா மேலுரமாக போட்டால் போதுமானது.
- கூடுதலாக பயன்படுத்துவதால் பயிர் செழித்து வளரும். இதன் காரணமாக பயிரில் பூ பூக்கும் காலம் தள்ளிப்போவதோடு, நோய் தாக்குதல் அதிகரிக்கும். அதைக் கட்டுப்படுத்த பூச்சி மருந்து தெளிக்க வேண்டும்.அதன் காரணமாக கூடுதல் செலவினம் ஏற்படும். அப்படியே செய்தாலும் உற்பத்தி பாதிக்கும்.
- இதனைத் தவிர்க்க விவசாயிகள், தங்கள் பகுதி வேளாண் அதிகாரிகளின் ஆலோசனை பெற்று நாற்று நட்டபின் முதல் களையெடுப்பின் போது (30 நாளில்) முதல் முறையாகவும், இரண்டாம் முறை களை எடுத்த பின் (பூ வைக்கும் பருவத்தில்) இரண்டாம் முறையாக ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவை மேலுரமாக பயன்படுத்தினால் போதுமானது.
- யூரியா பயன்பாட்டை குறைத்திட ஏக்கருக்கு 4 கிலோ யூரியா, ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத் தெளிப்பான் மூலம் பயிர் நன்கு நனையும் படி தெளித்தால் போதுமானது. அல்லது 800 கிராம் அசோஸ் பைரில்லத்தை 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து தெளித்தால், காற்றில் உள்ள தழைச் சத்தை பயிர்கள் கிரகித்துக் கொள்ளும்.
- மேற்கண்ட முறைகளை கையாண்டால் கூடுதல் செலவையும், பூச்சி தாக்குதலையும் தவிர்க்க முடியும்.
யூரியாவின் பயன்பாட்டை குறைக்கும், கொழிஞ்சி பசுந்தாள் உரம் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Nandri ungal sevai sirappanadu. Nandri..