யூரியா விலை உயர்வு ஒத்திவைப்பு

யூரியா உரத்தின் விலையை, 10 சதவீதம் உயர்த்த வேண்டும் என்ற உரத்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒத்தி வைத்துள்ளது.

மத்திய அரசு, நிர்ணயித்த விலையில் யூரியா உரம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ஏற்படும் இழப்பு, உர தயாரிப்பு நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. சென்ற 2011-12ம் நிதியாண்டில், உர மானியத்திற்கான தொகை, 24 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின், மானிய சுமையை குறைக்கும் வகையில், தற்போது, ஒரு டன் 5,310 ரூபாயாக உள்ள யூரியாவின் விலையை, 10 சதவீதம் அதிகரித்து, 5,841 ரூபாயாக உயர்த்த வேண்டும் என, உர அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

தற்போது, இந்த விலை உயர்வு தொடர்பான முடிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது, நாட்டில், யூரியா உரத்திற்கான தேவை ஆண்டுக்கு, 2 கோடியே 80 லட்சம் டன்னாக உள்ளது. இதில், 2 கோடியே 20 லட்சம் டன் யூரியா உரம் உள்நாட்டில் உற்பத்தியாகிறது. இறக்குமதி வாயிலாக, பற்றாக்குறை (60 லட்சம் டன்) பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “யூரியா விலை உயர்வு ஒத்திவைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *