யூரியாவை நேரடியாக பயிருக்கு இடும் போது, வீணாவதைத் தடுக்க யூரியா, ஜிப்சம், வேப்பம் புண்ணாக்கு கலந்து இடலாம் என வேளாண் துறை விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்துள்ளது.இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநர் ந. இளஞ்செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
- நெல் பயிருக்கு 16 வகையான சத்துகள் தேவைப்படுகின்றன. இதில் அதிக அளவில் பயிருக்குத் தேவைப்படுவது தழைச்சத்து.
- தழைச்சத்தை அளிக்கும் உரம் யூரியா, அமோனியம் குளோரைடு, அமோனியம் சல்பேட் ஆகியவையாகும்.
- இதில் விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்தும் யூரியாவில் 46 சதம் தழைச்சத்து உள்ளது. உற்பத்திச் செலவைவிட குறைவான விலையில் அரசு மானியத்துடன் யூரியா தனியார் கடைகளிலும், கூட்டுறவு சங்கத்திலும் விற்பனை செய்யப்படுகிறது.
- நெல் வயலில் யூரியாவை நேரடியாக இடும் போது, ஏறத்தாழ 30 சதம் மட்டுமே பயிருக்குக் கிடைக்கிறது.
- 70 சதம் பயிருக்குக் கிடைக்காமல் பல்வேறு காரணங்களால் வீணாகிறது.
- எனவே, யூரியாவின் முழுப் பலனும் பயிருக்குக் கிடைக்க யூரியாவுடன் ஜிப்சம், வேப்பம் புண்ணாக்கு கலந்து இடவேண்டும்.
- இதன்படி, 100 கிலோ யூரியாவுக்கு ஒரு கிலோ தார் வீதம் ஒரு உலோகப் பாத்திரத்தில் தார் உருகும் அளவுக்கு காய்ச்ச வேண்டும்.
- பின்னர், அதைக் குளிரவைத்து, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் சேர்த்து மெதுவாக கலக்க வேண்டும்.
- திரவ நிலைக்கு மாறிய தாரை குவித்து வைக்கப்பட்ட யூரியா உரத்தின் மீது ஊற்றி நன்றாகக் கலக்க வேண்டும்.
- பின்னர், பொடி செய்யப்பட்ட வேப்பம் புண்ணாக்குத் தூளை (100 கிலோ யூரியாவுக்கு 20 கிலோ வீதம்) கலக்க வேண்டும். நிறைவாக 80 கிலோ ஜிப்சத்தை நன்றாகக் கலந்து மேலுரமாக இட வேண்டும்.
- ஒரு முறை ஏக்கருக்கு 22 கிலோ யூரியா மட்டுமே இட வேண்டும்.
- இவ்வாறு யூரியா, ஜிப்சம், வேப்பம் புண்ணாக்கு கலந்து இடும்போது யூரியா சிறிது, சிறிதாக கரைந்து பயிருக்குத் தேவையான அளவுக்கு கிடைக்கும். இதனால், மறுமுறை யூரியா போடும் வரை பசுமை மாறாமல் பயிர் நன்கு வளர்ச்சியுடன் காணப்படும்.
- யூரியாவின் உபயோகத் திறன் அதிகரிப்பதால், செலவும் குறையும்.
- பூச்சி நோய்த் தாக்குதலும் குறையும். விளைச்சல் அதிகரிக்கும் என இளஞ்செழியன் தெரிவித்தார்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Thank you sir. Very useful.