விளைநிலத்தை பாதுகாக்கும் தக்கைப்பூண்டு இயற்கை உரம்

பழநி பகுதியில் யூரியா தழைச்சத்து உரத்திற்கு பதிலாக, குறைந்த செலவில் மண்வளத்தை மேம்படுத்தி பாதுகாக்கும் இயற்கை பசுந்தாள் தக்கைப்பூண்டுகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

 

 

 

 

 

 

 

 

இரண்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது பழநி பகுதியில் குறிப்பிட்ட அளவு மழைபெய்துள்ளதால், விவசாயிகள் வயலை உழுது, சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளனர். பொதுவாக நெற்பயிர் வளர தழைச்சத்து உரமாக விவசாயிகள் யூரியாவை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். விபரமான சில விவசாயிகளோ இயற்கை பசுந்தாள் உரமான தக்கைபூண்டு செடிகளை சாகுபடி செய்துள்ளனர்.விவசாயி பாலமுருகன் கூறியதாவது:

  • யூரியா ஒரு மூடை ரூ.285 முதல் 300வரை விற்கிறது. ஒரு ஏக்கருக்கு 3 மூடை அதாவது ரூ.1000 வரை செலவாகும்.
  • அதேசமயம் இயற்கை பசுந்தாள் உரமான தக்கை பூண்டு விதை ஒரு கிலோ ரூ.90. ஒரு ஏக்கருக்கு 5 கிலோ விதைத்தால் 40 நாட்களில் நன்றாக வளர்ந்து 16 டன் பசுந்தாள் உரம் கிடைக்கும்.
  • அவற்றை அப்படியே மடக்கி உழுது மண்ணில் மக்கச்செய்து, 10 நாட்களுக்குப்பின் நெல் நாற்றுகளை நடவு செய்வார்கள். தக்கைபூண்டு வளரும்போது புற்கள், இதரசெடிகளும் உடன் வளர்ந்துவிடும்.
  • அவை மடக்கி உழவு செய்தபின், நெற்பயிர் உடன் அவ்வளவாக களைச்செடிகள் வளரவாய்ப்பு இல்லை. அந்த செலவு சேமிப்பாகும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “விளைநிலத்தை பாதுகாக்கும் தக்கைப்பூண்டு இயற்கை உரம்

  1. ௵நிவாசன் says:

    உங்கள் செய்தி பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி. ஆனால் விரிவாக இல்லை, தங்கை பூண்டு சொடியை எப்படி மக்க விட வேண்டும் மக்கிய பின்பு உழவு செய்ய வென்டுமா தெளிவாக கூறுங்கள்.

  2. hassan says:

    rameswaram pahuthiyel nilathay kalapaiyu troctoru vaithu uluvathellai manvettyvaithuthan ulavu seyyavenndum yanranilaypadu ullathu thakkayponday marusularchi seyvatharku ithu thahuntha muraya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *