புதிய உரக் கொள்கையின்படி, 75 சதவீதம் வேம்பு கலந்த யூரியாவை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக வேளாண் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதுகுறித்து நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண் உதவி இயக்குநர் ஒருவர் கூறியது:
யூரியாவில் 60 சதவீதம் நைட்ரஜன் சத்து வீணாக்கப்படுகிறது. வேம்பு கலந்த யூரியாவைப் பயன்படுத்துவதால் இது குறைக்கப்படுகிறது.
மண்ணில் உள்ள நைட்ரோபேக்டர் என்ற பாக்டீரியா, யூரியாவில் உள்ள தழைச்சத்தை வேகமாகக் கரையச் செய்கிறது. வேம்பு கலந்த யூரியாவிலுள்ள டிரைட்டர்பென்ஸ் என்ற பொருள் நைட்ரோபேக்டர் செயல்பாட்டை குறைத்து, யூரியாவிலுள்ள தழைச்சத்தை பயிரின் தேவைக்கேற்ப கொடுக்கிறது. எனவே, யூரியா தேவை குறைக்கப்படுவதோடு, யூரியாவில் வேம்பு கலந்து இருப்பதால், ஒரு சிறந்த உயிர் பூச்சிக் கொல்லியாகவும், மண்ணிலுள்ள கரையான், நூல்புழுக்களையும் அது கட்டுப்படுத்துகிறது.
இதனால் விவசாயிகள் வேம்பு கலந்த யூரியாவைப் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். வேம்பு கலந்த யூரியாவை அரசு அதிகளவு உற்பத்தி செய்து விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேம்பு கலந்த யூரியாவைத் தொழில்சாலைகளுக்குப் பயன்படுத்த முடியாத காரணத்தினால், யூரியா பருவ காலங்களில் தேவைக்கேற்ப கிடைக்கும்.
மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள யூரியா புதிய உரக்கொள்கையின்படி, குறைந்தது 75 சதவீதம் வேம்பு கலந்த யூரியாவை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Please give me details of where to get in Nagercoil for Neem manure.