ஹியூமிக் அமிலம் (Humic acid) என்பது பூஞ்சாணம், நிலத்தடி நீர், புதைபொருட்களின் சிதைவுகளின் மூலம் உருவாகும் பல அமிலங்கள் சேர்ந்த கலவை.
- இந்த அமிலத்தை களிமண்ணில் தெளிக்கும்போது அது மண்ணை இலகுவாக மாற்றி அதன்மூலம் நீர் உட்கிரகிக்கும் திறனையும் ஆரோக்கியமான வேர் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
- மணற்பாங்கான இடத்தில் தெளிக்கும்போது அதனுடன் தேவையான அங்ககப் பொருட்களைச் சேர்த்து நீர் தேக்கும் திறனை அதிகரிக்கிறது.
- இதன்மூலம் மண்ணிலிருந்து சத்துக்கள் வெளியேறுவது தடுக்கப்படுகிறது.
- மண்ணில் தாவரத்திற்கு தேவையான சத்துக்களைதாவரம் உட்கொள்ளும் வகையில் எளிமையாக மாற்றுவதன் மூலம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
- நன்மை செய்யும் நுண்ணுயிர்களுக்கு ஹியூமிக் அமிலம் உணவாகிறது.
- நுண்ணுயிர்கள் மண்ணில் உள்ள சத்துக்களைக் கரைத்து பயிர்கள் உட்கிரகிக்க ஏதுவாக செயல்படுகிறது.
- ஒரு ஏக்கருக்கு 1 முதல் 2 லிட்டர் அமிலத்தை 40லிட்டர் நீரில் கரைத்து தெளிப்பான் மூலம் மண்ணில் தெளிக்கலாம்.
- பயிர்கள் மேல் தெளித்தல்:
- ஒரு ஏக்கருக்கு 1 முதல் 2 லிட்டர் ஹியூமிக் அமிலத்தை 20-40 லிட்டர் நீரில் கலந்து தெளிப்பான் கொண்டு பயிர்களின் மேல் தெளிக்க வேண்டும்.
- ஹியூமிக் அமிலத்தின் முக்கிய பயனே ரசாயன உரத்தின் பாதிப்பை குறைப்பதே ஆகும்.
- ஹியூமிக் அமிலம் சந்தையில் உள்ள அனைத்து அங்கக உரக்கடைகளிலும் கிடைக்கிறது.
- 30 லிட்டர் சுமார் 16-20 ரூபாய் என்ற அளவில் 25 லிட்டர் கேனாகக் கிடைக்கிறது.
(தகவல்: முனைவர் மு.பவித்ரா, முனைவர் எஸ்.சுந்தரவரதன், முனைவர் எஸ்.பார்த்தசாரதி, பண்டித ஜவகர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், காரைக்கால்.
போன்: 04368261372
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Vetrilai kodi sagupadi and valarchi patri solunga sir Betel leaf cultivation and how did growth in leaf tell details sir please a to z